Instagram Tiktok Reels Remix duet feature Tamil News : இன்ஸ்டாகிராம், டிக்டாக்கிலிருந்து பிரபலமான அம்சத்தை நகலெடுக்கிறது. இது பயனர்களை டூயட் செய்ய அனுமதிக்கிறது. இன்ஸ்டாகிராம் இதை “ரீமிக்ஸ்” அம்சம் என்று அழைக்கிறது. பயனர்கள் இப்போது ஓர் அசல் கிளிப்பைப் பயன்படுத்தி, அதன் எதிர்வினையையும் பக்கத்தில் சேர்க்கலாம். அல்லது அவர்களின் யோசனைகளுடன் ஆக்கப்பூர்வமான கதைகளையும் சேர்க்கலாம்.
“இப்போது நீங்கள் ரீல்ஸில் உள்ள ரீமிக்ஸ் அம்சத்தைப் பயன்படுத்தி ஏற்கெனவே இருக்கும் ஒன்றிற்கு அடுத்ததாக உங்கள் சொந்த ரீலை உருவாக்கலாம். உங்கள் எதிர்வினையை நீங்கள் கைப்பற்றினாலும், நண்பர்களுக்கு பதிலளித்தாலும் அல்லது உங்கள் சொந்த கிரியேட்டிவ் ஐடியாக்களை கொண்டு வந்தாலும், ரீமிக்ஸ் என்பது இன்ஸ்டாகிராமில் கொலாப் செய்வதற்கான மற்றொரு வழி" என மார்ச் 31 அன்று ட்விட்டர் கணக்கில் இன்ஸ்டாகிராம் வெளியிட்டது.
ஒரு ரீலை ரீமிக்ஸ் செய்வது எப்படி?
# ஒரு ரீலை ரீமிக்ஸ் செய்ய, திரையின் கீழ் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யவும்.
# “இந்த ரீலை ரீமிக்ஸ் செய்” விருப்பத்தைத் தட்டவும்.
# அசல் ரீலின் பக்கத்தில் தெரியும் உங்கள் சொந்த வீடியோவை பதிவு செய்யுங்கள் அல்லது பதிவேற்றுங்கள்.
# அசல் ரீலில் அதன் ஆடியோவை மாற்றுவது அல்லது அளவை மேலும் கீழும் மாற்றுவது உள்ளிட்ட மாற்றங்களைச் செய்ய நீங்கள் வெவ்வேறு கருவிகளைப் பயன்படுத்தலாம். நீங்கள் வாய்ஸ் ஓவர்களையும் சேர்க்கலாம்.
புதிதாக பதிவேற்றிய ரீல்கள் மட்டுமே ரீமிக்ஸ் விருப்பத்தை இயக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இருப்பினும், உங்கள் பழைய ரீல்களை மற்றவர்கள் ரீமிக்ஸ் செய்ய விரும்பினால், அம்சத்தை கைமுறையாக இயக்கலாம். அதற்கு நீங்கள் ரீலைத் திறக்க வேண்டும். மூன்று புள்ளிகளை மீண்டும் தட்டவும், பின்னர் “ரீமிக்ஸ் செய்வதை இயக்கு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் ரீல்களை மக்கள் ரீமிக்ஸ் செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்கள் அமைப்புகளுக்குச் சென்று, ரீல்களை க்ளிக் செய்து, விருப்பத்தை முடக்கவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil