New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/03/Instagram-1.jpg)
Instagram to add story draft feature soon how it will work Tamil News
Instagram to add story draft feature இந்த அம்சம் எவ்வாறு செயல்படும் என்பதற்கான ஸ்கிரீன் ஷாட்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.
Instagram to add story draft feature soon how it will work Tamil News
Instagram to add story draft feature soon : இன்ஸ்டாகிராம், புதிய ஸ்டோரீஸ் அம்சத்தைச் சேர்க்கத் தயாராக உள்ளது. பயனர்கள் விரைவில் முடிக்கப்படாத இன்ஸ்டாகிராம் பதிவுகளை, டிராஃப்ட்டில் சேமிக்க முடியும். இந்த அம்சம், ட்விட்டரில் டிராஃப்ட் செயல்படுவதைப் போன்றது. எனவே, நீங்கள் உங்கள் பதிவுகளை டிராஃப்ட்டில் சேமித்து, பின்னர் திரும்பி வந்து முழுவதுமாக முடிக்க விரும்பினால், அதனை எளிதில் செய்ய முடியும். இன்ஸ்டாகிராம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹாண்டில் வழியாக இந்த அம்சத்தின் வருகையை அறிவித்திருக்கிறது.
இன்ஸ்டாகிராமின் தலைவரான ஆடம் மொசெரி, இந்த புதிய அம்சம் “விரைவில் வரும்” என்று மட்டுமே பதிவு செய்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் பயனர்கள் அதிகம் கோரிய அம்சங்களில் இதுவும் ஒன்று என்றும் அவர் கூறினார். டிராஃப்ட் அம்சம் இன்னும் வடிவமைப்பில் இருக்கும்போது, இந்த அம்சம் எவ்வாறு செயல்படும் என்பதற்கான ஸ்கிரீன் ஷாட்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.
நீங்கள் முடிக்கப்படாத கதையைக் கைவிடும்போது, ஒரு சிறிய சாளரம் திரையில் பாப்-அப் செய்யும், பதிவுகளை டிராஃப்ட்களாக சேமிக்க வேண்டும் அல்லது அவற்றை நிராகரித்து புதிய கதையுடன் தொடங்கலாம் என்பதை இந்த ஸ்கிரீன் ஷாட்கள் (டிப்ஸ்டர் அலெஸாண்ட்ரோ பலுஸியால் கசிந்தவை) தெரிவிக்கின்றன. நீங்கள் ஒரு கதையை நிராகரிக்கும்போது, உங்கள் முந்தைய திருத்தங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்றும், அவற்றைப் பயனரால் மீட்டெடுக்க முடியாது உள்ளிட்ட செய்தி பாப்-அப்பையும் இன்ஸ்டாகிராம் காண்பிக்கும்.
‘டிராஃப்டை சேமி’ விருப்பத்தை க்ளிக் செய்யும்போது, இது உங்கள் கதை திருத்தங்களை இன்ஸ்டாகிராமின் டிராஃப்ட் பிரிவில் சேமிக்கும். இது நேரலையில் செல்லாது மேலும், பின்னர் அதனை உங்களால் அணுக முடியும். ‘ரத்துசெய்’ விருப்பமும் இருக்கும். இது உரையாடல் பெட்டியை அகற்றி, பயனர்கள் கதை உருவாக்கத்திற்குச் செல்ல அனுமதிக்கிறது. ஒரு கதையில் இருக்கும்போது யாராவது தற்செயலாக பின் பட்டனை அழுத்தினால், உள்ளடக்கம் நீக்கப்படாமல் இருப்பதனால் இந்த அம்சம் உதவியாக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.