New Update
00:00
/ 00:00
இன்ஸ்டாகிராமில் ‘ஃப்ரெண்ட் மேப்’ (Friend Map) என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது கிட்டதட்ட லைவ் லொக்கேஷன் ஷேரிங் அம்சமாகும். இன்ஸ்டாகிராம் நண்பர்களுடன் இதை ஷேர் செய்ய முடியும். இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அம்சம் குறித்து மெட்டா செய்தித் தொடர்பாளர் உறுதிபடுத்தி உள்ளார்.
இந்த வசதியில் பல்வேறு ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளது. தான் இருக்கும் லொக்கேஷனை யார் பார்க்கலாம், யாருடன் ஷேர் செய்யலாம் உள்ளிட்ட ஆப்ஷன்கள் உள்ளன. அதோடு ‘Notes’, ‘Ghost Mode’ உள்ளிட்ட ஆப்ஷகள் உள்ளன. ‘Ghost Mode’ பயன்படுத்தி பயனரின் last active location-ஐ hide செய்யலாம். ‘Close friends’ ஆப்ஷன் மூலம் நெருங்கிய நண்பர்கள் லிஸ்ட் செய்து அதில் லொக்கேஷன் அனுப்பலாம்.
மெட்டா இந்த வசதியை அறிமுகம் செய்தால் ஸ்னாப்ஷேட்-ல் உள்ள ஸ்னாப் மேப் வசதியை போன்ற இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.