New Update
/indian-express-tamil/media/media_files/bQsqr16BNQT0UtFmQ6GD.jpg)
/
மெட்டாவிற்கு சொந்தமான மிகவும் பிரபலமான ஆடியோ மற்றும் வீடியோ ஷேரிங் தளமான இன்ஸ்டாகிராம் செயலி, அதிரடியாக புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. அதில், மற்றவர்களுடைய ப்ரொபைலை நீங்கள் ஸ்டோரியாக வைக்கலாம்.
டிப்ஸ்டர் அலெஸாண்ட்ரோ பலுஸி இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மற்றவர்களுடைய ப்ரொபைலை நீங்கள் உங்கள் ஸ்டோரியாக பதிவிடலாம். இன்ஸ்டா பயனர் தங்களுக்கு விருப்பமான மற்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இதை செய்யலாம். அவ்வாறு செய்யும் போது, அந்த நபரின் ப்ரொபைல் உடன் சமீபத்திய 3 பதிவுகள் ஸ்டோரியாக காண்பிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இது எப்போதும் போல் உள்ள ‘Add to Story’ ஆப்ஷன் போலவே பயன்படுகிறது. அதோடு அந்த ஸ்டோரியில் அந்த பயனரின் ப்ரொபைலை பார்க்க ஏதுவாக ‘view profile’ பட்டன் வைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் ஆரம்ப நிலையில் உள்ள கன்டண்ட் க்ரியோட்டர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு அதிக பாலோயர்கள் வருவதற்கு உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இது எப்போதும் உள்ள ஸ்டோரி ஆப்ஷனைப் போலவே இதுவும் 24மணி நேரத்தில் மறைந்துவிடும்.
இந்த அம்சம் விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.