உலகெங்கிலும் முடங்கியது இன்ஸ்டாகிரம் சமூக வலைதளம்...

Social Media Network Instagram down : லாகின், நீயூஸ் ஃபீட், மற்றும் புரோஃபைல்களை பார்ப்பதில் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள் பயனாளிகள்

சமூக வலைதளம் இன்ஸ்டாகிரம் முடக்கம் : உலகெங்கிலும் மிகவும் பிரபலமான சமூக வலைதளம் தான் இன்ஸ்டாகிரம். முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிரம் என சமூக வலைதளங்களில் தான் நாம் தினமும் விழித்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பயனாளிகளுக்கு இன்று இன்ஸ்டாகிரம் சிறிது நேரம் வேலை செய்யவில்லை.

சமூக வலைதளம் இன்ஸ்டாகிரம் முடக்கம் : ட்விட்டரில் சந்தேகம்

இதனால் ஆத்திரமடைந்த பயனாளர்கள் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் மீம்கள் போட்டு இன்ஸ்டாகிரமை ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மற்றும் இந்தியாவில் இருக்கும் பல்வேறு பயனாளர்கள் இன்ஸ்டாகிரம் ஃப்ரோபைல்களில் இப்படியான பிரச்சனைகள் எழுந்து வந்தது. பல பயனாளிகளால் தங்கள் நட்பு வட்டத்தில் இருக்கும் மக்களின் ஃபுரோபைல்களை பார்க்க இயலவில்லை.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

நியூஸ்ஃபீட், லாகின் என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த யூஸர்கள் ட்விட்டர் பக்கத்தில் வந்து எனக்கு மட்டும் தானா இன்ஸ்டாகிரம் வேலை செய்யவில்லை என்று கேள்வி கேட்டு தங்களின் சந்தேகங்களை போக்கிக் கொண்டனர்.

செப்டம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்க பயனாளிகளின் சொந்த தகவல்கள் அனைத்தும் வாட்ஸ் ஆப், பேஸ்புக், மற்றும் ட்விட்டர் மூலமாக லீக்கானது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close