New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/05/Instagram-Reuters.jpg)
இன்ஸ்டாகிராம் ஆப்பில் நீங்கள் போஸ்ட் செய்யப்படும் போட்டோ, வீடியோவுக்கு மற்றவர்கள் லைக் செய்த எண்ணிக்கையை மறைக்க முடியும், அது பற்றி இங்கு பார்ப்போம்.
இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் இளைஞர்களுக்கு பிடித்த செயலியாக உள்ளது. பல்வேறு துறை பிரபலங்கள், நட்சத்திரங்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகின்றனர். அவர்கள் பற்றின அப்டேட் கொடுக்கின்றனர். அதில் ஆக்டிவ்-வாக இருக்கின்றனர். இதனாலே பெரும்பாலான இளைஞர்கள் இன்ஸ்டா பயன்படுத்துகின்றனர். பல்வேறு நாடுகளில் மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தப்படுகிறது.
போட்டோ, வீடியோ, ரீல்ஸ் செய்து அப்லோடு செய்ய முடியும். அதை உங்கள் நண்பர்கள் எனப் பலர் பார்த்து லைக் செய்வர். தங்களது வீடியோ, ரீல்சுக்கான லைக்ஸ், வியூஸ் அடிப்படையில் பலர் வருமானம் பெறுகின்றனர். சிலர் தங்களது போட்டோ, வீடியோவுக்கான லைக்ஸ், வியூஸ் மற்றவர்களுக்கு தெரிய வேண்டாம் என நினைப்பர். அதற்கும் புது அம்சத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்கள் போஸ்ட் லைக்ஸ், வியூஸ் மறைப்பது எப்படி?
பயனர்கள் தங்களது இன்ஸ்டா போஸ்ட்கான லைக்ஸ், வியூஸை மறைக்க முடியும். அதாவது நீங்கள் இனிமேல் போஸ்ட் செய்யும் படத்திற்கான லைக்ஸ், வியூஸ் மறைப்பதற்கு, போஸ்ட் செய்யும் முன் கீழே உள்ள Advanced settings ஆப்ஷனை கிளிக் செய்து, ‘Hide like and view counts on this post’ எனக் கொடுக்க வேண்டும். இதை செய்தால் உங்கள் போஸ்ட்-க்கான லைக்ஸ், வியூஸ் மறைக்கப்படும்
ஏற்கனவே போஸ்ட் செய்த படங்களுக்கு லைக்ஸ், வியூஸ் மறைப்பது எப்படி?
இன்ஸ்டாகிராம் நிறுவனம் அதற்கும் ஆப்ஷன் வழங்கி உள்ளது. முதலில் எந்த படத்திற்கான லைக்ஸ், வியூஸை மறைக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து தேர்வு செய்யப்பட்ட படத்தை கிளிக் செய்து வலப்புறத்தில் உள்ள 3 புள்ளி மெனுவை கிளிக் செய்து ‘Hide like count’ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து மறைத்துக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.