போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைத்தளமான மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம், தற்போது வீடியோக்களில் ஆட்டோ ஜெனரேட்டட் கேப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய வசதியானத காதுகேளாதவர்களும் இன்ஸ்டா வீடியோர் பார்த்து மகிழ்ச்சியைட வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது. கேப்ஷன் ஆன் அல்லது ஆப் செய்யும் வசதி தனியாக வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 2021 இல், இனி இன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வுக்கான செயலியாக இருக்காது. பொழுதுபோக்கு மற்றும் வீடியோ பிரிவில் இணை விரும்புவதாக அந்நிறுவனம் அறிவித்தது. அப்போதிருந்து, வீடியோ பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்த இன்ஸ்டாகிராம் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
தற்போதய அப்டேட், காது கேளாமை பிரச்சினை கொண்ட இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
இந்த அப்டேட் குறித்த தகவலை இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் "இது நீண்ட நாள்களுக்கு பிறகு வந்துள்ளது. இருப்பினும், செவித்திறன் சரியாக இல்லாதவர்களுக்கும், காது கேளாத சமூகங்களில் உள்ளவர்களுக்கும் இத்தைகய புதிய கருவியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார். இந்த புதிய அம்சம் மூலம், சத்தம் அதிகமுள்ள பகுதிகளில் வீடியோ காண உதவியாக அமைகிறது.
It’s a long time coming, but we’re excited to share a new tool that empowers those in the deaf and hard-of-hearing communities.
Videos on Instagram will now have auto-generated captions, where you have the option to turn them off or on. pic.twitter.com/DNyzcdiPSU— Adam Mosseri (@mosseri) March 1, 2022
ஐஜிடிவி செயலி நிறுத்தம்
இன்ஸ்டாகிராம் இந்த வார தொடக்கத்தில் IGTV செயலியை நிறுத்தியது. அதற்கு பதிலாக முக்கிய Instagram பயன்பாட்டில் உள்ள Reels வழியாக அதன் ஷாட் வீடியோவை ஆதரிப்பதில் கவனம் செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஐஜிடிவியில் வழங்கப்பட்டு வந்த அனைத்து அம்சங்களும், வீடியோ சேவைகளும் இனி இன்ஸ்டாகிராம் செயலியிலேயே வழங்கப்படும்
வரும் மாதங்களில் முக்கிய இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் வீடியோவை எளிதாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் பணிகள் நடைபற்று வருகிறதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுளின் YouTubeக்கு போட்டியாக IGTV ஜூன் 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சேவையானது, நீண்ட வடிவ வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற பயனர்களை அனுமதித்தது. ஆனால், எதிர்பார்த்தப்படி அந்த சேவை வரவேற்பை பெறவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.