Instagram will now display ads in reels Tamil News : இன்ஸ்டாகிராம் இப்போது ரீல்ஸ் விளம்பரங்களைக் காட்டத் தொடங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு, சமூக ஊடக நிறுவனமான இது, இப்போது ரீல்ஸ் விளம்பரங்களை அறிமுகப்படுத்துகிறது. இன்ஸ்டாகிராம் இனி முழுத்திரை விளம்பரங்களைக் காண்பிக்கும். மேலும், அவை ஸ்டோரியில் உள்ளதைப் போலவே செங்குத்தாக இருக்கும். தனிப்பட்ட ரீல்களுக்கு இடையில் விளம்பரங்களைக் காணலாம்.
“உங்களைப் பின்தொடராத நபர்களைக் காண இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் சிறந்த இடம். மேலும், பிராண்டுகள் மற்றும் படைப்பாளர்களை யாராலும் கண்டுபிடிக்கக்கூடிய வளர்ந்து வரும் உலகளாவிய பிளாட்ஃபார்ம் இது. இந்த விளம்பரங்கள், வணிகங்களுக்கு அதிக பார்வையாளர்களை அடைய உதவும். மேலும், பிராண்டுகள் மற்றும் படைப்பாளர்களிடமிருந்து ஊக்கமளிக்கும் புதிய உள்ளடக்கத்தைக் கண்டறிய மக்களை அனுமதிக்கிறது” என்று இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளது.
விளம்பரங்கள் 30 வினாடிகள் வரை இருக்கக்கூடும் என்றும் கருத்து, பார்க்க, சேமிக்க மற்றும் பகிரும் விருப்பத்தை மக்கள் பெறுவார்கள் என்றும் நிறுவனம் கூறுகிறது. கூடுதலாக, ரீல்ஸ் உள்ளடக்கத்தை அணுக விளம்பரங்கள் மிகவும் பிரபலமான இடங்களில் தோன்றும் என்று இன்ஸ்டாகிராம் கூறுகிறது. இதில் உங்கள் ஃபீடில் ரீல்ஸ் டேப், ரீல்ஸ் ஸ்டோரீஸ், ரீல்ஸ் ஆராய்ச்சி ஆகியவை அடங்கும்.
இந்த ஆண்டு, இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான நிறுவனம், ரீல்ஸ் விளம்பரங்களை முதலில் சோதனை செய்தது. பின்னர், இந்த நிறுவனம் கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளம்பரங்களை சோதித்தது. புதிய வடிவமைப்பை ஏற்றுக்கொண்ட பிராண்டுகளில் பி.எம்.டபிள்யூ, நெஸ்லே (நெஸ்பிரெசோ), லூயி உட்டன், நெட்ஃபிளிக்ஸ், உபெர் மற்றும் பல உள்ளன.
“இன்ஸ்டாகிராமில் உள்ள வேறு எந்த விளம்பரத்தையும் போலவே, அவர்கள் பார்க்கும் ரீல்ஸ் விளம்பரங்களின் கட்டுப்பாடுகளையும் நாங்கள் மக்களுக்கு வழங்குவோம். மக்கள் விரும்பாத விளம்பரத்தைப் பார்த்தால், அவர்கள் விளம்பரத்தைத் தவிர்க்கலாம் அல்லது அதை மறைக்க அல்லது புகாரளிக்க இடுகையின் மெனுவை க்ளிக் செய்யலாம்”என்று இன்ஸ்டாகிராம் ஒரு வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.