Advertisment

இன்ஸ்டா பிரியர்களே! வருகிறது நியூ அப்டேட்...சிஇஓ சொன்ன புது தகவல்!

இன்ஸ்டாகிராமில் 9:16 என்ற விகிதத்தில் புகைப்படங்களை பதிவிடும் வகையில் புது அப்டேட் செய்யப்பட உள்ளதாக அதன் சிஇஓ ஆடம் மொசெரி தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
ட்விட்டரைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம்.. ப்ளூ டிக் வசதிக்கு விரைவில் கட்டணமா?

சமூகவலைதளங்கள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகப்படியான பயன்பாடு உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் சமூகவலைதளப் பயன்பாடு குறைவாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில் சாமானிய மக்களின் வாழ்க்கை முதல் அரசியல் வரை சமூகவலைதளங்கள் திருப்பு முனையாக அமைந்துள்ளது. காரணம், உலகத்தில் நடப்பவை அனைத்தும் நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ளலாம். கடைகோடி மக்களுக்கும் உடனுக்குடன் விரைவாக தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

அந்த வகையில் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் இளைஞர்களுக்கு பிடித்த செயலியாக உள்ளது. திரை பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள், பல துறை பிரபலங்கள் இன்ஸ்டா பயன்படுத்துகின்றனர். சிறந்த பொழுதுபோக்கு செயலியாக உள்ளது. இதில் உள்ள ரீல்ஸ் அம்சம் பலரையும் கவர்ந்துள்ளது. பாடல் பாடியும், நடனம் ஆடியும், சினிமா வசனத்திற்கு ஏற்ப நடித்தும் ரீல்ஸ் செய்கின்றனர். அவ்வகையில் புதுபுது வசதிகளை இன்ஸ்டா நிறுவனம் அதன் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இன்ஸ்டா நிறுவன சிஇஓ ஆடம் மொசெரி புது அப்டேட் குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். Ask Me Anything அமர்வில் பதிலளித்த அவர், "இதுவரை இன்ஸ்டாகிராமில் திரை உயர அளவில் வீடியோக்கள் (Tall videos) பதிவிடும் வசதி மட்டும் இருந்தது. தற்போது (Tall photos) உயரமான அளவில் புகைப்படம் பதிவிடும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது" என்றார்.

இன்ஸ்டாவில் வெர்ட்டிகள் புகைப்படம் (vertical images) 4:5 என்ற Ratioவில் பதிவாகும். இது தற்போது 9:16 என்ற Ratioவில் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த அப்டேட் பயனர்களுக்கு புது அனுபவத்தையும், இன்ஸ்டா பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்கும் என்றார்.

இன்ஸ்டாகிராமில் வருங்காலங்களில் வீடியோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புது அம்சங்கள் அறிமுக்கப்படுத்தப்பட உள்ளது. வீடியோக்கள் போல், புகைப்படங்களும் முழு திரையில் பார்க்க முடியும். பயனர்களின் கவனத்தை ஈர்க்க கூடிய வகையில் இருக்கும். விரைவில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இன்ஸ்டாகிராம் அண்மையில் வீடியோ பயன்பாட்டில் மாற்றம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது ஃபோனில் உள்ள இரண்டு கேமராக்களையும் பயன்படுத்தி ரீல்ஸ் செய்யும் வசதியை கொண்டு வந்தது.

ஃபோன் முன்புற, பின்பற கேமரா பயன்படுத்தி ரீல்ஸ் செய்யலாம். பின்புற கேமராவில் வீடியோவும், முன்புற கேமராவில் உங்கள் ரீயாக்சனும் பதிவு செய்யலாம். பின்புற கேமரா வீடியோ பெரிதாகவும், முன்புற கேமராவில் பதிவான உங்க ரீயாக்சன் வீடியோ சிறிதாகவும், இரண்டும் சேர்ந்து ரீல்ஸாக கிடைக்கும். இந்த வசதி பயனர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Technology Instagram Instagram Video Instagram Users
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment