இன்ஸ்டாகிராம் செயலி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களை மேலும் கவர அவ்வப்போது புதிய வசதிகளை இன்ஸ்டாகிராம் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள Your Activity பிரிவில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வசதி மூலம், பயனர்கள் தங்கள் செயல்பாடுகளை ஒரே இடத்தில் பார்க்கவும் நிர்வகிக்கவும் முடியும்.
அப்டேட்டின் முக்கிய அம்சமாக, அனைத்து விதமான போஸ்ட்கள், கமெண்ட்களை ஒரே இடத்தில் மொத்தமாக டெலிட் செய்திட முடியும்.
முன்னதாக, your actibvity டேப்பில் இன்ஸ்டாகிராமில் எவ்வளவு நேரம் செலவிட்டுள்ளீர்கள், நோட்டீபிகேஷன்கள் போன்றவற்றை மட்டுமே காணமுடியும்.
புதிய அட்டேட்டில் பயனாளர்கள் தங்களது போஸ்ட், மெசேஜ், லைக்ஸ், ஸ்டோரிஸ் போன்றவற்றை தேதி வாரியாக வகைப்படுத்தி பார்த்திட முடியும். அந்த டேப்பில் உங்களது மொத்த செயல்பாடுகளையும் காண முடியும். நீங்கள் முன்பு ஸ்டோரிஸ் மற்றும் போஸ்ட்களுக்கு பதிவிட்ட கமெண்ட்களையும் பார்வையிடலாம். பல நாள்களுக்கு முன்பு நண்பரின் பதிவில் போட்ட கமெண்ட்டையும் தேடி, எளிதாக டெலிட் செய்திடலாம்.
இதுதவிர, புதிய வசதி மூலம் டெலிட் செய்த கன்டன்ட்களையும் தேடி எடுக்கலாம். ப்ரவசர்களில் இருப்பது போலவே இன்ஸ்டாகிராம் search history வசதி வருகிறது. அதில், நீங்கள் பார்வையிட்ட லிங்க்குகளையும், அதில் செலவிட்ட நேரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம்.
பயனாளர்கள் Profile Section-இல் வசது புறம் மேலே Your Activity Tab-ஐ காணலாம். புதிய வசதியை பெற, மறக்காமல் இன்ஸ்டாகிராம் செயலியை அப்டேட் செய்யுங்கள்.
பழைய கணக்கை மீட்டெடுத்தல்
இன்ஸ்டாகிராமில் கணகுகளை அணுக முடியாத நிலைமை ஏற்பட்டால், நண்பர்கள் மூலம் கணக்கை மீட்டெடுப்பதற்கான அப்டேட் சோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Take a Break
இந்த வார தொடக்கத்தில், இன்ஸ்டாகிராம் Take a Break என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. அதன் மூலம், நீண்ட நேரம் செயலியில் ஸ்க்ரோலிங் செய்யும் பயனர்களுக்கு, போனுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்கள் என்பது பிரேக் எடுத்திட உங்களை நினைவூட்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil