/indian-express-tamil/media/media_files/2025/10/24/stories-using-meta-ai-2025-10-24-18-39-02.jpg)
இன்ஸ்டா ஸ்டோரிகளில் ரீஸ்டைல் ஏ.ஐ... ஒரே கிளிக்-ல் ட்ரெண்டிங் ஸ்டோரி தயார்!
மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக ஊடகத்தளமான இன்ஸ்டாகிராம், ஸ்டோரிகள் பிரிவில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மெட்டா ஏ.ஐ. (Meta AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடிட் செய்வதற்கான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
உங்க இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் இனி புகைப்படங்களையும் வீடியோக்களையும் மெட்டா ஏ.ஐ.-யை பயன்படுத்தி, நீங்க நினைத்தபடி திருத்த முடியும். கூகுள் ஃபோட்டோஸின் ‘Help Me Edit’ அம்சத்தைப் போலவே, உங்க வாய்மொழிக் கட்டளைகளுக்கு ஏற்ப ஏ.ஐ, படத்தை எடிட் செய்து கொடுக்கும். இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த அம்சத்தின் பெயர் 'Restyle'. இதன் மூலம் நீங்க என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா? உங்க ஸ்டோரியில் இருக்கும் தேவையில்லாத ஒரு நபரையோ, பொருளையோ நொடியில் மாயமாக்கலாம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
படம் சாதாரணமாக இருந்தால், அதை கற்பனையான கலையாக (Whimsical Effect) மாற்றி, மொத்த 'வைப்'-பையும் மாற்றலாம். பேக்ரவுண்ட் நிலவில் உள்ள பீச் போல மாற்று என்று சொன்னால், அப்படியே செய்து கொடுக்கும். உங்க நண்பர்களுடன் சேர்ந்து ஒரு புதிய எடிட்டிங் ட்ரெண்ட் ஆரம்பிக்கலாம். முன்பு இந்த ஏ.ஐ. எடிட்டிங் வசதிகள் இன்ஸ்டாகிராமின் மெட்டா சாட்போட்டிற்குள் மட்டுமே ஒளிந்திருந்தன. ஆனால், இப்போது பெயிண்ட் பிரஷ் ஐகானாக (Restyle button) ஸ்டோரிக்-குள் வந்துவிட்டதால், இது கேக் சாப்பிடுவது போல ஈஸியாகிவிட்டது.
இனி உங்க ஸ்டோரியை எடிட் செய்ய ஒரு நிபுணராக இருக்க வேண்டியதில்லை. இந்த எளிய ஸ்டெப்ஸ் பின்பற்றுங்கள்.
இன்ஸ்டாகிராமைத் திறந்து, எப்போதும் போல ஸ்டோரி போடுவதற்கான (+) பட்டனைத் தட்டுங்கள். உங்க கேமரா ரோலில் இருந்து படத்தைத் தேர்ந்தெடுங்கள். அங்கே புதிதாக தோன்றும் 'Restyle' பிரஷ் ஐகானை கிளிக் செய்யுங்கள். இப்போது, உங்க கற்பனையைத் தட்டிவிடுங்கள். இந்த நாய்க்குட்டியைத் தூக்கிவிட்டு, பின்னணியை நியான் விளக்குகளால் மாற்று என்று இயற்கையான மொழியில் (Natural Language) கட்டளையிடுங்கள். நீங்க முடித்ததும், 'Done' கொடுத்து சிறிதுநேரம் வெயிட் பண்ணுங்க. மேஜிக் போட்டோவாக மாறும்.
வீடியோக்களை எடிட் செய்யும்போது, ஏ.ஐ. நேரடியாக பொருட்களை நீக்க முடியாது. ஆனால், நீங்க கேட்கும் 'மூட்' அல்லது 'ஸ்டைல்'-க்கு ஏற்ப அற்புதமான 'ப்ரீசெட்' (Preset) போட்டு தேர்ந்தெடுத்துக் கொடுத்து, வீடியோவுக்கே சினிமாட்டிக் லுக் கொடுக்கும்.
நீங்க எடிட்டிங்கில் மாஸ்டர் ஆக வேண்டுமானால், உங்க கட்டளைகள் தெளிவாக இருக்க வேண்டும். மெட்டா நிறுவனம் சில டிப்ஸ்களை வழங்குகிறது. நீங்க எதை எடிட் செய்யச் சொல்கிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். சூரிய அஸ்தமனம் போல பொன்னிற ஒளி கொடு அல்லது இருண்ட, மர்மமான மூட் வேண்டும் எனக் கேளுங்கள். வின்டேஜ் ஃபில்டர் போல மாற்று அல்லது கார்ட்டூன் ஸ்டைலுக்கு மாற்று என்று குறிப்பிடுங்கள். இனி இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகள் சாதாரணமாக இருக்காது; உங்க ஒவ்வொரு ஸ்டோரியும் ஏ.ஐ. தலைசிறந்த படைப்பாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us