இன்ஸ்டாகிராமில் உள்ளவர்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டியவை!

மாற்றங்களை விரைவில் நிகழ்த்த இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப உலகில் வாட்ஸப், ஃபேஸ்புக்கிற்கு அடுத்து இன்ஸ்டாகிராம் செயலி இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்ஸ்டாகிராம் யூசர்கள் கட்டாயமாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஆஃப்ஷன்கள் இதோ உங்களுக்காக…

இன்ஸ்டாகிராம் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள தனியுரிமை அமைப்பு மூலம், ஹேக்கர்கள் நமது சுய விபரத்தை அறிந்துக் கொள்ள முடியாத வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம், உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கின் யூசர் நேம் மற்றும் ரகசிய பாஸ்வேர்ட் ஆகியவற்றை தெரிந்து வைத்திருப்பவர்களால் கூட , உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை ஆக்டிவ் செய்து பயன்படுத்த முடியாது. அத்துடன்,ஹேக்கர்கள் உங்கள் கணக்கை ஹேக் செய்து அதை தவறான வழிகளில் பயன்படுத்தவும் முடியாது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் செயலியை பெண்கள் அதிகளவில் பயன்படுத்துவதால், ஃபேஸ்புக்கை போன்றே பாதுகாப்பு அம்சங்கள் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பாதுகாப்பு முறையை இன்ஸ்டாகிராம் ஆக்டிவ் செய்யும் முறைகள்:

*உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரோஃபையில் பகுதிக்கு சென்று, ரைட் கிளிக் செய்ய வேண்டும்.

*அதில் பாதுகாப்பு குறீயிடு வேண்டும் என்பதை உறுதி செய்ய ஆன் செய்ய வேண்டும். அப்போது ஓடிபி போன்ற குறியீடு உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும்.

*நீங்கள் இன்ஸ்டாகிராமில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருந்தால் மட்டுமே, ஒடிபியை பெற முடியும்.

*பின்பு, அந்த குறியீடு பாதுகாப்பு பக்கத்தில் பதிவிட்டு அடுத்த படிக்கு செல்ல வேண்டும்.

* பின்பு, பாதுகாப்பு கருதி உங்கள் மொபைல் எண்ணை நீங்கள் நீக்குவதற்கும் ஆப்ஷன்கள் உள்ளன.

*இந்த பாதுகாப்பு வசதியை நீங்கள் ஆன் செய்த பிறகு, அடையாளம் தெரியாத புதிய சாதனங்களில் இருந்து இன்ஸ்டாகிராமிற்குள் நுழைய முயன்றால், யூசர் நேம் மற்றும் ரகசிய பாஸ்வேர்டை தவிர உங்களுக்கு அனுப்பப்பட்ட ரகசிய குறீயீட்டையும் கேட்கும். அதை பதிவு செய்த பிறகே செயலியை பயன்படுத்த முடியும்.

இன்ஸ்டாகிராம் செயலின் இந்த புதிய பாதுகாப்பு வசதி, கணக்கை பாதுகாப்பை வைத்திருக்க பெருமளவில் உதவும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், யூசர்களின் கருத்தைக் கொண்டு மேலும் ,சில மாற்றங்களை விரைவில் நிகழ்த்த இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

×Close
×Close