scorecardresearch

5 புதிய வசதிகள்… அசத்தும் வாட்ஸ் ஆப்: நீங்க இதை மிஸ் பண்ணாதீங்க!

இது வாட்ஸ்அப் வெப் பயனர்கள் தங்களின் குறுஞ்செய்திகளை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். இந்த அம்சம் ஏற்கெனவே செயலி பயன்படுத்தும் பயனர்களுக்கு இருக்கிறது.

Whatsapp new features
Whatsapp new features

Whatsapp new features : தகவல் பரிமாற்ற உலகில் நிச்சயம் வாட்ஸ் அப்பிற்கு முதலிடம் உண்டு. ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய அம்சங்களை வெளியிட்டுக்கொண்டு இருப்பதனால், அதனை உபயோகப்படுத்துவதில் இருக்கும் ஆர்வம் மக்களிடத்தில் சிறிதும் குறையவில்லை எனலாம். டெஸ்க்டாப், லேப்டாப் போன்றவற்றில் இணைத்து உபயோகிக்கக்கூடிய வாட்ஸ்அப் வெப்பில் விரைவில் கைரேகை அடிப்படையிலான அணுகலைப் பெறுவதற்கான வசதிகள் வரவிருக்கின்றன எனச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இது வாட்ஸ்அப் வெப் பயனர்கள் தங்களின் குறுஞ்செய்திகளை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். இந்த அம்சம் ஏற்கெனவே செயலி பயன்படுத்தும் பயனர்களுக்கு இருக்கிறது.

பேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்த செயலி சமீபத்தில் சில புதிய அப்டேட்டுகளை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது நிச்சயம் பயனர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் எனவும் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிதாக்கும் எனவும் நம்பப்படுகிறது. பல புதுமையான அம்சங்களை முயற்சி செய்யவும் சோதிக்கவும் பதிவுசெய்த பயனர்களைத் தேர்ந்தெடுத்து, வாட்ஸ்அப் அதன் புதிய பீட்டா பதிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் வரவிருக்கும் ஐந்து வாட்ஸ்அப் புதிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்

*க்ரூப் கால் வசதிகளில் வெவ்வேறு ரிங்டோன்கள் வைத்துக்கொள்ளக்கூடிய அம்சத்தை வாட்ஸ்அப் விரைவில் கொண்டு வரக்கூடும். இந்த அப்டேட் தனிப்பட்ட அழைப்புகள் மற்றும் குழு அழைப்புகளை வேறுபடுத்துவதற்குப் பயனர்களுக்கு எளிதாக இருக்கும்.

*முன்பு, வாட்ஸ்அப் டூடுல்கள் அதன் டெஸ்க்டாப் அல்லது வெப் பதிப்பில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்த புதிய வாட்ஸ் அப் அப்டேட்டில், ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் டூடுல்பயன்பாடு அறிமுகப்படுத்தக்கூடும்.

*இந்த செயலி விரைவில் அழைப்புகளுக்கான புதிய மேம்படுத்தப்பட்ட UI-ஐக் கொண்டு வரக்கூடும். அதாவது, அழைப்பிற்கான பட்டன் கீழ்ப் பகுதிக்கு மாற்றப்படும் என்றும் அதனோடு தகவல் பட்டன், ஆடியோ பட்டன் மற்றும் கேமரா, மெசேஜ் பட்டன் கொண்ட வீடியோ பட்டன் ஆகியவை அடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

*ஏராளமான அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸ்களையும் அடுத்த அப்டேட்டில் பார்க்க முடியும். இது நிச்சயம் பயனர்களுக்குச் சுவாரசிய அனுபவமாக அமையும்.

*வணிகக் கணக்கைப் (business account) பொறுத்தவரை, போர்ட்ஃபோலியோவை உடனடியாகக் காட்டும் ஷார்ட் கட் வழிமுறையைக் கொண்டுவரவிருக்கிறது வாட்ஸ் அப். மேலும், புதிய அழைப்பு பட்டனைச் சேர்க்கவும் வாய்ப்பிருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Interesting whatsapp features coming soon