New Update
00:00
/ 00:00
கூகுள் இந்தியா டிஜிட்டல் சர்வீசஸ் மற்றும் என்.பி.சி.ஐ இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் ஆகியவை இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் யு.பி.ஐ சேவையை விரிவுபடுத்த உதவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்.ஓ.யு) கையெழுத்திட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியப் பயணிகள் கூகுள் பே (Google Pay- GPay) மூலம் பிற நாடுகளில் எளிதாக பணம் செலுத்த முடியும். ரூபாய் நோட்டுகளை மாற்றுவது போன்ற பிற சிரமங்களை இதன் மூலம் தவிர்க்க முடியும். நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடும் போது தடையற்ற அனுபவத்தை வழங்கும் குறிக்கோளுடன், மற்ற நாடுகளில் யு.பி.ஐ போன்ற டிஜிட்டல் கட்டண முறையை உருவாக்க உத்தேசித்துள்ளதாகவும் ஒப்பந்தம் கூறுகிறது.
கூகுள் பே இந்தியா பார்ட்னர்ஷிப்ஸ் இயக்குனர் தீக்ஷா கவுஷல் கூறுகையில், என்.பி.சி.ஐ (National Payments Corporation of India) உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் பணப் பரிவர்த்தனைகளை எளிமையாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கான மற்றொரு படியாகும் என்று கூறினார்.
தற்போதுள்ள யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யு.பி.ஐ) உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி, நாடுகளுக்கு இடையே பணம் அனுப்பும் செயல்முறையை எளிதாக்குவதில் கூட்டாண்மை கவனம் செலுத்தும்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/tech-news-technology/google-pay-partners-with-npci-to-expand-upi-for-international-payments-9112960/
இது சர்வதேச கட்டண முறையாக யு.பி.ஐ-ன் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், வெளிநாட்டு நாணயம், கிரெடிட் மற்றும் ஃபாரெக்ஸ் கார்டுகளால் வரையறுக்கப்பட்ட இந்திய வாடிக்கையாளர்களுக்கான அணுகலை வெளிநாட்டு விற்பனையாளர்களுக்கு வழங்கவும் உதவும். மேலும், வெளிநாட்டில் உள்ள இந்தியர்களுக்கும் இதன் மூலம் பயன் பெறுவர் என்று கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.