iOS இயங்கு தளம்
85% ஐபோன்கள் மற்றும் ஐபேட்கள் iOS 11 இயங்கு தளத்தில் தான் இயங்குகிறது. ஆப்பிள் நிறுவனம் iOS இயங்கு தளம் பற்றிய அறிவிப்பினை நேற்று வெளியிட்டிருந்தது. அதில் 85 % ஆப்பிள் ப்ரோடக்டுகள் iOS 11-ல் வேலை செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினம் (03/09/2018) ஆப்பிள் ஸ்டோர் டிஸ்ட்ரிபூசன் பக்கத்தில் வெளியான இந்த தகவலில் ஐபோன், ஐபாட், மற்றும் ஐபாட் டச் டிவைஸ்களில் பெரும்பாலானவை iOS 11-ல் இயங்குகிறது என்றும், 10% ப்ரோடட்டுகள் iOS 10ல் இயங்குகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
iOS 11ன் அடுத்த வெர்ஷன் iOS 12 செப்டம்பர் 12ம் தேதி வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது. புதிதாக வெளிவர இருக்கும் ஐபோன்கள் பற்றிய ஒரு பார்வை
செப்டம்பர் 12ல் வெளியாக இருக்கும் புதிய ஐபோன்கள்
ஐபோன் XS மற்றும் ஐபோன் 9 செப்டம்பர் 12ல் வெளியாகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். இந்த இரண்டு போன்களுடன் ஆப்பிள் வாட்ச் 4 (Apple Watch Series 4) மற்றும் புதிய ஐபேட் போன்ற தயாரிப்புகளும் வெளிவர இருக்கிறது.
ஆப்பிள் பார்க் கேம்பஸ்ஸில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் நேரடை ஒளிபரப்பினை காண விரும்புபவர்கள் ஆப்பிள் டிவி ஆப்பினை பயன்படுத்திக் காணலாம்.