ஐபோனில் டிக்டாக், பப்ஜி, டிண்டர் செயலிகள் திடீர் செயலிழப்பு – நடந்தது என்ன?

iOS apps crashing : செயலிகள் செயலிழப்பு நிகழ்வு நடைபெறுவது இது முதல்முறை அல்ல என்றும், இதற்கு முன் மே 6ம் தேதி இதேபோன்று ஏற்பட்டு அன்றைய நாள் முழுவதும் செயலிகள் செயல்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By: July 10, 2020, 8:56:15 PM

ஆப்பிள் ஐபோன் பயனாளர்களுக்கு இன்று ( ஜூலை 10ம் தேதி) ஒரு அதிர்ச்சிகரமான நாளாகவே அமைந்திருக்கும். ஏனெனில், இந்த போனில் பயன்படுத்தப்பட்டு வந்த பின்டிரஸ்ட், பப்ஜி மொபைல், ஸ்பாட்டிபை, டிக்டாக், டிண்டர் உள்ளிட்ட செயலிகள் திடீரென்று செயலிழந்ததால் பயனர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

இந்த செயலிகளை உபயோகிப்பவர்கள் அதற்கான லாகின்களை கொண்டு பயன்படுத்தி வருகின்றனர். பலர் லாகின் செய்தும் அந்த செயலி ஒழுங்காக திறக்கப்பட்டு வேலை செய்யவில்லை. இதன்காரணமாக அவர்கள் தொடர்ந்து முயற்சித்ததன் விளைவாகவே, இந்த செயலிகள் இன்று செயலிழந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆப்கள் செயலிழப்பு விவகாரம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி, மாலை 4 மணியளவில், ஐபோன் பயனாளர்கள் இந்த நிகழ்வை சந்தித்ததாக DownDetector.com இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்கள் செயலிழப்பு நிகழ்வு, ஐபோன் மற்றும் ஐபாட்களிலேயே ஏற்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டுகளில் இந்த செயலிழப்பு நிகழவில்லை. செயலிகள் வழக்கம்போல் இயங்கின.

இந்த செயலிகள் செயலிழப்பு நிகழ்வு நடைபெறுவது இது முதல்முறை அல்ல என்றும், இதற்கு முன் மே 6ம் தேதி இதேபோன்று ஏற்பட்டு அன்றைய நாள் முழுவதும் செயலிகள் செயல்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப் டெவலப்பர்களை, பேஸ்புக் அதன் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் கிட்டை இன்ஸ்டால் பண்ண தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஏனெனில், அப்போதுதான் அதனால், பயனாளர்களின் தகவல்களை எவ்வித தடையுமின்றி எடுத்துக்கொள்ள முடியும். இந்த சாப்ட்வேர் டெவலப்மெண்ட் கிட், டெவலப்பர்களுக்கும், மார்க்கெட்டிங் டீமுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.ஆனால், தற்போதோ, பேஸ்புக் நிறுவனம் இதன்மூலமாகவே, அதனுடைய விளம்பரங்களை நிர்வகித்து வருவதாக ஆப் டெவலப்பர் குயில்ஹெர்மே ராம்போ தெரிவித்துள்ளார்.

பப்ஜி மொபைல் நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐபோன் பயனாளர்களே, உங்களது போனில் ஆப்கள் செயலிழப்பு நிகழ்வு குறித்த விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டது. இந்த விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவளித்த பயனாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Here’s why Spotify, Tinder, PUBG Mobile, more apps crashed for iOS users globally

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Ios phone tiktok apple iphone apps ios apps crashing iphone ipad spotify

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X