பண்டிகை காலம் என்பதால் பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் பொருட்கள் விற்பனை தளங்கள் ஆஃபர்கள் அறிவித்துள்ளன. வீட்டு உபயோக பொருட்கள், ஸ்மார்ட்போன்கள், ஐபோன்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் போன்றவற்றிக்கு ஆஃபர்கள் கொடுத்துள்ளன. இதைப் பயன்படுத்தி குறைந்த விலையில் பொருட்கள் வாங்கி கொள்ளலாம். எல்லாம் நவீனமையமாகி வருவதால், ஆன்லைன் பர்சேஸ் கூட அதிகமாகி வருகிறது. காய்கறிகள், உடைகள், அழகு சாதன பொருட்கள் என அனைத்தும் ஆன்லைனில் வாங்கி கொள்ளலாம். தொழில்நுட்பம் முன்னேறி வருகிறது.
அந்த வகையில் பிளிப்கார்ட்டில் ஐபோன்களுக்கு சிறந்த ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐபோன் 14 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் முந்தைய மாடலான ஐபோன் 13 விலை சற்று குறைந்துள்ளது. அதோடு ஆஃபர் பயன்படுத்தி எடுத்தால் மேலும் விலை குறைவாக வாங்கலாம். ஐபோன் 14 மற்றும் ஐபோன் 13-யில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. பிளிப்கார்ட்டில் எக்ஸ்சேஞ்ச் மற்றும் பேங்க் ஆஃபர் பயன்படுத்தி ஐபோன் 13 ரூ. 48,000க்கு கீழ் பெறலாம்.
ஐபோன் 13 பிளிப்கார்ட்டில் ரூ.66,990க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அறிமுக விலையை விட ரூ.10,000 குறைவாகும். ஆஃபர்கள் பயன்படுத்தி குறைந்த ரூ. 50,000க்கு கீழ் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் போன்களுக்கு ரூ.18,500 வரை கொடுக்கின்றனர். உங்கள் பழைய ஐபோன் 11, ஐபோன் 12 எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் நல்ல விலை கிடைக்கும். ஐபோன் 11 ரூ. 16,000 வரை பெற்றுக்கொள்கின்றனர். அதோடு பேங்க் ஆஃபர் பயன்படுத்தலாம்.
எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் பயன்படுத்திய பிறகு ஐபோன் 13 விலை ரூ.50, 900 ஆகும் குறையும். இப்போது, எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு பயனாராக இருந்தால் இ.எம்.ஐ-யில் ரூ.2,000 ஆஃபருடன் ரூ. 750 உடனடி தள்ளுபடி.
பிளிப்கார்ட் ஆக்சிஷ் (Flipkart Axis) பேங்க் கிரெடிட் கார்டு பயனர்கள் கார்டு மூலம் வாங்கும் போது 5 சதவீத தள்ளுபடி கிடைக்கும். அதோடு, ரூ. 999 மதிப்புள்ள BYJU’s 3 நேரலை வகுப்புகளை இலவசமாக பெறலாம்.
ஐபோன் 13 சிறப்பம்சம்
ஐபோன் 13 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. A15 Bionic 5nm Hexa-core பிராஸசரில் இயங்குகிறது. 128GB, 256GB மற்றும் 512GB ஆகிய 3 ஸ்டோரேஜ் வசதிகளில் கிடைக்கிறது. டூயல் கேமரா செட்அப் கொண்டது. 3240mAh பேட்டரி மற்றும் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“