ஐபோன் 15, ஆப்பிளின் சமீபத்திய ஐபோன், இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக ரூ.79,900-ல் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், Paytm மால் செயலியில் ஐபோன் 15 ஆச்சரியமூட்டும் தள்ளுபடியை வழங்குகிறது. ப்ரீமியம் ஐபோன் 15 பேடி.எம் மால் செயலியில் ரூ. 44,940க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிட்டதட்ட ரூ.34,960 தள்ளுபடியாக வழங்குகிறது. ஐபோன் 15 அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பார்க்கப்பட்ட குறைந்த விலை இதுவாகும்.
மற்ற இ-காமர்ஸ் தளங்கள் அமேசான், ப்ளிப்கார்ட், .ஜியோ மார்ட் தளங்களை விட பேடி.எம் மால் செயலியில் ஐபோன் 15 மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.34,960 தள்ளுபடியாக வழங்குகிறது. ஐபோன் 15 இன் விலையை எப்போதும் இல்லாத அளவிற்கு விலை குறைந்துள்ளது.
ஐபோன் 15 சிறப்பம்சம்
ஐபோன் 15 உயர்தர அம்சங்களுடன் வருகிறது. இது 2556×1179 பிக்சல் கொண்டுள்ளன மற்றும் 2,000 நிட்ஸ் உச்ச பிரகாசத்துடன் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. போன் A16 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் இது ஹை- ரெசல்யூசன் தரத்துடன் போட்டோ, வீடியோ எடுக்க 48 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது,
தற்போது, ஐபோன் 15 வாங்க சிறந்த தளம் Paytm மால் ஆகும். Paytm Mall-ல் ஆப்பிள் ஐபோன் 15 44,940 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மற்ற தளங்கள் ப்ளிப்கார்ட்டில் ரூ.70,990, அமேசானில் ரூ. .70,990, ஜியோ மார்ட்டில் ரூ.69,900 என விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“