ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் சாதாரணமாகவே 5000 mAh வரை பேட்டரி கேபாசிட்டி கொண்டிருக்கும். அதிகபட்சமாக 6000 mAh வரை பேட்டரி வசதி வழங்கப்படுகிறது. ஆனால் ஆப்பிள் போன்களில் அப்படி அல்ல. அந்த வகையில் ஐபோன் 15 சீரிஸ் போன்களின் பேட்டரி கேபாசிட்டி-ஐ நிறுவனம் அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது.
IT Home-ன் சமீபத்திய அறிக்கை படி, புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஐபோன் 15 சீரிஸ் போன்கள் அவற்றின் முன்னோடிகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவு பெரிய பேட்டரிகளை கொண்டிருக்கும் எனக் கூறியுள்ளது.
மிகப்பெரிய 4,912 mAh பேட்டரி
அதன்படி, ஐபோன் 15 ஆனது 3,877 mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஐபோன் 15 பிளஸ் ஆனது 4,912 mAh திறன் கொண்ட ஐபோனிலேயே மிகப்பெரிய பேட்டரியை கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும்,
ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவை முறையே 3,650 mAh மற்றும் 4,852 mAh திறன் கொண்ட பெரிய பேட்டரிகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவை 3என்எம் ஃபேபிட் ஏ17 செயலி மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவை A16 பயோனிக் சிப் கொண்டிருக்கும். அதிக திறன் கொண்ட பேட்டரி, மேம்பட்ட செயல் திறன் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஐபோன் 15 சீரிஸ் 4 போன்களும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. அவ்வாறு இருந்தால் இது பயனர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”