இந்தியாவில் ஐபோன் 16 அறிமுகமாகி 4 மாதங்களே ஆகும் நிலையில் ப்ளிப்கார்ட் தளத்தில் அதிரடி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. Monumental sale-ல் ரூ.10,000 தள்ளுபடியில் ரூ. 69,999க்கு விற்பனை ஆகிறது. கூடுதல் வங்கி தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுடன் இணைந்தால், ஒருவர் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய புத்தம் புதிய iPhone 16-ஐ ரூ.63,999க்கு பெறலாம்.
இதில் எச்.டி.எப்.சி கார்டு பயனர்களுக்கு ரூ.2,000 தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளில் ரூ.4,000 தள்ளுபடியும் உள்ளது.
ஐபோன் 16 போனில் ஆப்ளிள் Intelligence, கேமரா கன்ட்ரோல் மற்றும் ஆக்ஷன் கன்ட்ரோல் உள்ளது. 6.1-இன்ச் திரையுடன், இது 2025-ல் கிடைக்கும் மிகச் சிறிய முதன்மை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும், இது சிறப்பு அம்சங்கள் நிறைய வழங்குகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/CJBs2qhukFVZ6JcMqenn.jpg)
மேலும், ஐபோன் 16 ஆனது 4K தெளிவுத்திறனில் டால்பி விஷன் வீடியோக்களை படமெடுக்கும் திறன் கொண்ட 48 MP பிரதான கேமரா, ஒரு பிரீமியம் கிளாஸ்-மெட்டல் சாண்ட்விச் வடிவமைப்பு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீடு மற்றும் MagSafe-இயங்கும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு ஆகியவை உள்ளது.