ஐபோன் 16 செப்டம்பர் 9-ம் தேதி உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதையொட்டி ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 விலை குறைந்துள்ளது. அமேசான், ப்ளிப்கார்ட் தளத்தில் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
ஐபோன் 15
ஐபோன் 15, முதலில் ரூ.79,600க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது ரூ.69,999க்கு விற்கப்படுகிறது. அதாவது, ரூ.9,601 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, வங்கிச் சலுகைகளும் கிடைப்பதால் விலை மேலும் குறையும். அமேசான், ப்ளிப்கார்ட் தளத்தில் சலுகை வழங்கப்பட்டு விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.
ஐபோன் 14
ஐபோன் 14 ரூ.69,600 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது ஆஃபரில் ரூ.57,999 விலையில் உள்ளது. ரூ.11,601 பிளாட் தள்ளுபடி கிடைக்கிறது. அதோடு வங்கிச் சலுகைகளையும் பெறலாம். ப்ளிப்கார்ட் தளத்தில் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ஆஃபர் வழங்குவதால் மேலும் குறைந்த விலையில் ஐபோன் 14,15-ஐ பெற முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“