ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர செப்டம்பர் நிகழ்வை இந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பூங்காவில் நடத்துகிறது. இதில் 4 புதிய ஐபோன்களை அறிமுகம் செய்துள்ளது.
ஐபோன் 16 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்கிறது. இந்த போன்களில் பிரத்யேக ஏ.ஐ தொழில்நுட்பங்களை சேர்க்க உள்ளது. அதாவது ஆப்பிள் நுண்ணறிவை சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் சிரி யூ.ஐ அப்டேட், ஐ.ஓ.எஸ் 18, மேம்பட்ட டிசைன் உள்ளிட்டவை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐபோன் 16 சீரிஸ் அறிமுகமாக உள்ளதால், நிறுவனம் 6 டிவைஸ்களை நிறுத்துவதாகவும் கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ , ஐபோன் 15 மேக்ஸ், ஐபோன் 14 ப்ளஸ் மற்றும் ஐபோன் 13 ஆகியவற்றை நிறுத்துவதாக கூறுகிறது. அதே போல் செப்டம்பர் 9, புதிய ஏர்போட்ஸ் அறிமுகம் செய்யப்படும் நிலையில், ஏர்போட்ஸ் 2,3 வெர்ஷனும் நிறுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“