ஐபோன் 16 ப்ரோ: வெறும் ரூ.57,105-க்கு வாங்குவது எப்படி? அமேசானின் அதிரடி ஆஃபர்!

ஐபோன் 16 ப்ரோ மாடலில் 6.3-இன்ச் திரை, புதிய A18 ப்ரோ சிப்செட், மேம்படுத்தப்பட்ட 48MP கேமரா, நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் மேம்பட்ட ஆடியோ வசதிகள் போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன.

ஐபோன் 16 ப்ரோ மாடலில் 6.3-இன்ச் திரை, புதிய A18 ப்ரோ சிப்செட், மேம்படுத்தப்பட்ட 48MP கேமரா, நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் மேம்பட்ட ஆடியோ வசதிகள் போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன.

author-image
WebDesk
New Update
iPhone 16 Pro price

ஐபோன் 16 ப்ரோ: வெறும் ரூ.57,105-க்கு வாங்குவது எப்படி? அமேசானின் அதிரடி ஆஃபர்!

செப்டம்பர் 2024-ல் நடந்த 'க்ளோடைம்' நிகழ்வில், ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய மாடல்களான ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 ப்ரோ வரிசையை வெளியிட்டது. இந்த அறிவிப்பு, ஸ்மார்ட்போன் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த வரிசையில் 4 மாடல்கள், அனைத்தும் 128 GB அடிப்படை சேமிப்புடன், பல்வேறு விலையில் வந்தன.

இந்தியாவில் ஐபோன் 16 விலை விவரம்:

ஐபோன் 16: ரூ.79,900

ஐபோன் 16 ப்ளஸ்: ரூ.89,900

ஐபோன் 16 ப்ரோ: ரூ.1,19,900

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்: ரூ.1,44,900

ஐபோன் 16 ப்ரோ வெறும் ரூ.57,105-க்கு வாங்குவது எப்படி? 

Advertisment

விலை அதிகமாக இருக்கிறதே என்று கவலைப்பட வேண்டாம்! அமேசான் நிறுவனம் நம்பமுடியாத சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் உங்கள் கனவுப் போனை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். ஐபோன் 16 ப்ரோ மாடலை நீங்கள் வெறும் ரூ.57,105-க்கு வாங்குவது எப்படி ?என்பதைப் பார்க்கலாம். அமேசானில் ரூ.1,19,900 விலையில் இருக்கும் ஐபோன் 16 ப்ரோ, அமேசானின் 10% தள்ளுபடியால் ரூ.1,07,900 ஆக குறைகிறது. இதன் பிறகுதான் உண்மையான மேஜிக் தொடங்குகிறது.

உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.45,400 வரை தள்ளுபடி பெறலாம். இந்த தள்ளுபடியுடன் ஐபோன் 16 ப்ரோ-வின் விலை வெறும் ரூ.62,500 ஆக குறைகிறது. இத்துடன், அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், கூடுதலாக ரூ.5,395 தள்ளுபடி கிடைக்கும். இறுதியாக, இந்த சலுகைகள் அனைத்தையும் பயன்படுத்தினால், ஐபோன் 16 ப்ரோ-வை வெறும் ரூ.57,105-க்கு வாங்கலாம்.

ஐபோன் 16 ப்ரோ-வின் மிரட்டலான அம்சங்கள்!

புதிய கலர்: 'நேச்சுரல் டைட்டானியம்' நிறத்துடன், புதிய தங்க நிறமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

டிஸ்ப்ளே: ஐபோன் 16 ப்ரோ 6.3-இன்ச் திரையுடனும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9-இன்ச் திரையுடனும் வருகிறது. இது ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரிய திரை.

புதிய ப்ராசஸர்: புதிய A18 ப்ரோ சிப்செட் மூலம் 20% வேகமான கிராபிக்ஸ் செயல்திறனையும், குறைந்த மின் நுகர்வையும் அனுபவிக்கலாம்.

கேமரா: 48MP கேமராவுடன் ஷட்டர் லேக் இல்லாத அற்புதமான புகைப்படங்களை எடுக்கலாம். 4K120 வீடியோ பதிவு வசதியும் உள்ளது.

பேட்டரி: ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ், இதுவரை வெளிவந்த ஐபோன்களிலே மிக நீண்ட பேட்டரி ஆயுளைக் கொண்டிருப்பதாக ஆப்பிள் அறிவித்தது.

ஆடியோ: வீடியோ எடுக்கும்போது ஸ்பேஷியல் ஆடியோ பதிவு செய்யலாம். 'இன்-ஃபிரேம் மிக்ஸ்' அம்சம் பேச்சையும் பின்னணி இசையையும் பிரித்து, ஸ்டுடியோவில் பதிவு செய்தது போன்ற தெளிவான ஒலியைத் தருகிறது. மொத்தத்தில், ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 ப்ரோ வரிசை, செயல்திறன் மற்றும் அம்சங்களில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. 

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: