ஏ.ஐ. அம்சங்கள், 48 எம்.பி கேமரா, நீடித்த பேட்டரி லைஃப்; ஐபோன் 17 சீரிஸ் புதிய வசதிகள் என்னென்ன?

ஐபோன் 17 சீரிஸ் வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என 4 மாடல் போன்கள் அறிமுகமாக உள்ளன. ஐ.ஓ.எஸ். 26 இயங்குதளத்தில் இந்த போன்கள் வெளியாக உள்ளன.

ஐபோன் 17 சீரிஸ் வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என 4 மாடல் போன்கள் அறிமுகமாக உள்ளன. ஐ.ஓ.எஸ். 26 இயங்குதளத்தில் இந்த போன்கள் வெளியாக உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Apple iPhone 17 Pro Max

ஏ.ஐ. அம்சங்களுடன் ஐபோன் 17 சீரிஸ் இன்று அறிமுகம்! என்னென்ன புதிய அம்சங்கள்?

உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் ஆண்டு தோறும் தனது வருடாந்திர நிகழ்வில் தனது நிறுவன செல்போன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட சாதனங்களின் புதிய அப்டேட்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு இன்று நடைபெறும் என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர "Awe-dropping" நிகழ்வு இந்திய நேரப்படி இன்றிரவு 10:30 மணிக்குத் தொடங்கியது. இந்நிகழ்வில், ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:

ஆப்பிள் நிறுவனம் சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வளர்ச்சியான சாதனங்களான, ஐபோன் 17 ஏர், ஏர்பட்ஸ் ப்ரோ 3, மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 ஆகியவற்றை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air)

புதிய ஐபோன் 17 ஏர் 6.3 இன்ச் ப்ரோமோஷன் (ProMotion) டிஸ்ப்ளே, A19 சிப் மற்றும் 48MP டூயல் ஃப்யூஷன் கேமரா சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. இதில் உள்ள, புரட்சிகரமான சென்டர் ஸ்டேஜ் (Center Stage) முன்பக்க கேமரா, செல்ஃபிக்காக ஃபோனைத் திருப்ப வேண்டிய அவசியம் இல்லாத நிலையில், வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும், இது 5.6 மிமீ தடிமன் கொண்ட, இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் மெல்லிய ஐபோன். இந்த மெல்லிய வடிவமைப்பிலும், ஐபோன் 17 ஏர், A19 ப்ரோ சிப், ஆப்பிளின் முதல் தனிப்பயன் மோடம் மற்றும் வயர்லெஸ் சிப்களுடன் நாள் முழுவதும் பேட்டரி லைஃப் வழங்குகிறது.

ஏர்பட்ஸ் ப்ரோ 3 (AirPods Pro 3)

ஏர்பட்ஸ் ப்ரோ 3, முந்தைய தலைமுறையை விட இரண்டு மடங்கு சிறந்த ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனை (Active Noise Cancellation) வழங்குகிறது. இது ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) மூலம் இயக்கப்படும் லைவ் ட்ரான்சிலேஷன், காதுகளில் பயன்படுத்த 2 வகையாக ஆப்ஷன்கள் கொண்ட மேம்பட்ட பொருத்தம், மற்றும் IP57 மதிப்பீட்டைக் கொண்ட அதிகநாள் நீடிக்கும் வசதி ஆகிய அம்சங்களை வழங்குகிறது. வொர்க் அவுட் செய்யுபோது இதயத் துடிப்பைக் கண்டறிதல் மற்றும் 50 க்கும் மேற்பட்ட வொர்க் அவுட் வகைகளைக் கண்காணித்தல் போன்ற புதிய உடல்நல அம்சங்கள் உள்ளன. இதன் பேட்டரி ஆயுள், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் உடன் 8 மணிநேரமும், டிரான்ஸ்பரன்சி மோடில் (Transparency Mode) 10 மணிநேரமும் நீடிக்கும். இதன் விலை 249 டாலர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

ஆப்பிள் வாட்ச் (Apple Watch)

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, எஸ்இ 3 (SE 3), மற்றும் அல்ட்ரா 3 (Ultra 3) ஆகியவை குறிப்பிடத்தக்க உடல்நல முன்னேற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறியாத 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு முதல் ஆண்டில் உயர் இரத்த அழுத்த அறிவிப்புகளை கொடுக்கிறது. அனைத்து மாடல்களும் தூக்கத்தை நிர்வகிப்பது, 5G இணைப்பு மற்றும் மேம்பட்ட நீடித்த உழைப்பைக் கொண்டுள்ளன. அல்ட்ரா 3 ஆஃப்-கிரிட் தகவல்தொடர்புக்கு செயற்கைக்கோள் இணைப்பைச் சேர்க்கிறது. அதே சமயம், சீரிஸ் 11 ஆனது 24 மணிநேர பேட்டரி லைஃப் வழங்குகிறது. மேலும், எஸ்இ 3 பட்ஜெட் விலையில் எப்போதும் இயக்கத்தில் இருக்கும் டிஸ்ப்ளேவை (Always-on display) வழங்குகிறது.

Iphone 17 Spece

ஐபோன் 17 ஏர் என்றால் என்ன?

ஆப்பிள் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள, ஐபோன் 17 ஏர் மாடல், வெறும் 5.6 மிமீ தடிமன் கொண்ட, இதுவரை இல்லாத அளவில் மிகவும் மெல்லிய ஐபோன். இது 80 சதவீத மறுசுழற்சி செய்யப்பட்ட டைட்டானியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. 6.5-அங்குல புரோமோஷன் (ProMotion) டிஸ்ப்ளே, இருபுறமும் செராமிக் ஷீல்ட் (Ceramic Shield) உள்ளது. இதனால் இதன் பின்பக்கம் நான்கு மடங்கு அதிக விரிசல் தடுப்புத் திறனுடன் உள்ளது.

இவ்வளவு மெல்லிய வடிவமைப்பைக் கொண்டிருந்தாலும், iOS 26-இன் அடாப்டிவ் பவர் (Adaptive Power) மற்றும் புதிய N1 வயர்லெஸ் சிப் மூலம் திறன் அதிகரித்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது, இந்த புதிய சிப், ஆற்றல் பயன்பாட்டை 30 சதவீதம் குறைத்து, இதை இதுவரை இல்லாத அளவில் மிக அதிக ஆற்றல் திறன் கொண்ட ஐபோனாக மாற்றுகிறது.

இரண்டாம் தலைமுறை டைனமிக் கேச்சிங்குடன் கூடிய 6-கோர் CPU மற்றும் 5-கோர் GPU மூலம் இயக்கப்படும் இந்த ஐபோன், மேக்புக் ப்ரோ-நிலை செயல்திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (on-device AI) திறன்களுடன் இருக்கிறது. இதில் உள்ள கேமரா அமைப்பில் 12MP 2x டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் புதிய 18MP சென்டர் ஸ்டேஜ் (Center Stage) கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது மிக மெல்லிய வடிவத்தில் மேம்பட்ட போட்டோக்களை கொடுக்கிறது, அதில் இ-சிம் (e-sim) மட்டுமே பயன்படுத்த முடியும்.

Iphone 171

ஆப்பிளின் மிகவும் மேம்பட்ட சிலிக்கான் மற்றும் அடாப்டிவ் பவர் மோட் போன்ற புதிய ஆற்றல் சேமிப்பு அம்சங்களுடன் இயங்கும் ஐபோன் ஏர், நாள் முழுவதும் நீடிக்கும் பேட்டரி லைஃப் உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும், புதிய மேக்சேஃப் (MagSafe) மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கேஸ்கள் போன்ற புதிய ஆக்சஸெரீஸ்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுவாக பெரிய 5,000mAh பேட்டரிகள் ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டுமே இருக்கும். ஆனால், ஐபோன் 17 ப்ரோ, போன்களில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பேட்டரியைக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேட்டரி ஆயுளை நீட்டிக்க ஆப்பிள் நிறுவனம் பாரம்பரியமாக மென்பொருள் மேம்பாடுகளைச் சார்ந்துள்ளது. ஆனால் இந்த மாடலில், அந்த மேம்பாடுகளுடன் ஒரு குறிப்பிடத்தக்க ஹார்டுவேர் மேம்பாட்டையும் இணைப்பதாக தெரிகிறது.

Iphone 17

ஐபோன் 17 ப்ரோவில் செராமிக் ஷீல்ட் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது, இது அனோடைசேஷன் (anodization) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு துல்லியமான அலுமினியம் யூனிபாடியைக் கொண்டுள்ளது. ஐபோனில் இதுவரை இல்லாத மிகப்பெரிய பேட்டரி இதில் இருக்கும் என்று ஆப்பிள் கூறுகிறது. பின்பக்க கேமரா தொகுதியில் ஆன்டெனாக்களுடன் மூன்று லென்ஸ்கள் உள்ளன, மேலும் முன்பக்க டிஸ்ப்ளே கூடுதல் மற்றும் நீடித்த உழைப்பிற்காக செராமிக் ஷீல்ட் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

Technology Iphone

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: