/indian-express-tamil/media/media_files/2025/09/10/apple-event-2025-2025-09-10-09-04-49.jpg)
ஐபோன் ஏர் முதல், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ் ப்ரோ 3 வரை... ஆப்பிள் 2025 நிகழ்வின் ஹைலைட்ஸ்!
ஆப்பிள் நிறுவனம், (செப்.9) செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற ‘Awe Dropping’ நிகழ்வில் 4 புதிய ஐபோன் 17 மாடல்கள், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3, ஏர்பாட்ஸ் புரோ 3, புதிய ஐ.ஓ.எஸ் 26 உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்நிகழ்வின் முக்கிய ஈர்ப்பாக, 5.6 மி.மீ. தடிமன் கொண்ட, இதுவரை இல்லாத வகையில் மிக மெல்லிய ஐபோன் ஏர் இருந்தது. இது ஆப்பிளின் முதல் கஸ்டம் மோடம் மற்றும் வயர்லெஸ் சிப்களுடன் கூடிய A19 Pro சிப் மூலம் இயங்குகிறது. இதன் விலை $999 மற்றும் செப்டம்பர் 19 முதல் விற்பனைக்கு வருகிறது.
ஐபோன் ஏர்
5.6 மி.மீ. தடிமன் கொண்ட இது, 165 கிராம் எடை கொண்டுள்ளது. ஆப்பிளின் வரலாற்றிலேயே மிகவும் மெலிதான ஐபோன் ஆகும். ஏ19 ப்ரோ சிப், ஆப்பிளின் முதல் தனிப்பயன் மோடம் மற்றும் வயர்லெஸ் சிப்களுடன் இணைக்கப்பட்டு, மெலிதான வடிவமைப்பிலும் நாள் முழுவதும் நீடிக்கும் பேட்டரி ஆயுள் வழங்குகிறது. ஐபோன் ஏர் விலை $999. செப்டம்பர் 19 முதல் விற்பனைக்கு வரும்.
ஐபோன் 17
6.3 அங்குல புரோமோஷன் டிஸ்பிளே, 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது பேட்டரி திறனைச் சேமிக்க Always-on முறையில் 1Hz ஆகக் குறையும். 48MP டூயல் பியூஷன் கேமரா அமைப்பு மற்றும் ஒரு புதிய சென்டர் ஸ்டேஜ் முன் கேமரா (landscape selfies எடுக்க ஃபோனைச் சுழற்றத் தேவையில்லை). புதிய 3nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏ19 சிப். சிராமிக் ஷீல்டு 2 கண்ணாடி, கீறல்களுக்கு எதிராக 3 மடங்கு அதிக எதிர்ப்பைத் தருகிறது. லாவெண்டர், சேஜ், மிஸ்ட், நீலம் மற்றும் கருப்பு ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும். இதன் விலை $799.
ஐபோன் 17 புரோ, புரோ மேக்ஸ்
முழுமையான புதிய வடிவமைப்பு, மெல்லிய அலுமினிய யுனி-பாடி மற்றும் ஆப்பிளின் முதல் நீராவி அறை (vapour chamber) வெப்ப அமைப்புடன் வருகிறது. ஐபோன் 16 ப்ரோவை விட 40% சிறந்த செயல்திறனை வழங்குகிறது. முந்தைய டைட்டானியம் மாடல்களை விட எடை குறைவானது. அனைத்து கேமராக்களும் (முன், பின்) 48MP திறன் கொண்டவை. புதிய பியூஷன் டெலிபோட்டோ லென்ஸ் 4x மற்றும் 8x ஜூம் வழங்குகிறது. ஏ19 ப்ரோ சிப், eSIM-only வடிவமைப்பு காரணமாக, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் இதுவரை இல்லாத அளவு 39 மணிநேர வீடியோ பிளேபேக் பேட்டரி ஆயுளை வழங்குகிறது. ஐபோன் 17 ப்ரோ $1099, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் $1199.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11
பேட்டரி ஆயுள் 24 மணிநேரமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஸ்லீப் ஸ்கோர் அம்சம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கண்டறியும் (hypertension) திறன் (FDA ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது) ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. டிஸ்பிளே, சீரிஸ் 10-ஐ விட இரு மடங்கு கீறல் எதிர்ப்புத் திறன் கொண்டது. 5ஜி இணைப்பு வசதி உள்ளது. விலை: $399 முதல் தொடங்குகிறது.
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3
OLED டிஸ்பிளே, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, மேம்படுத்தப்பட்ட பேட்டரி திறன், சேட்டிலைட் இணைப்பு மற்றும் அருகில் உள்ள இடங்களை காட்டும் ‘வேபாயிண்ட்’ (Waypoint) அம்சம் போன்ற பல மேம்படுத்தல்களுடன் வருகிறது. இதன் விலை $799 ஆகும்.
ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3
ஸ்லீப் ஸ்கோர், ஓவுலேஷன் மதிப்புகள், தூக்கத்தில் மூச்சுத் திணறல் (sleep apnea) கண்டறிதல் மற்றும் உடல் வெப்பநிலை கண்காணிப்பு போன்ற அம்சங்கள் உள்ளன. S10 சிப் மற்றும் 5ஜி செல்லுலார் வசதி. விலை: $249 முதல் தொடங்குகிறது.
ஏர்பாட்ஸ் புரோ 3
புதிய ஏர்பாட்ஸ் புரோ 3 பழைய தலைமுறையை விட 2 மடங்கு செயல்திறன் கொண்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஆப்பிள் இன்டலிஜென்ஸ் மூலம் நேரடி மொழிபெயர்ப்பு, மேம்பட்ட உடற்பயிற்சி கண்காணிப்பு (50+ உடற்பயிற்சி வகைகள்) மற்றும் IP57 நீடித்த தன்மை ஆகியவை இதில் உள்ளன. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்-ஐ இயக்கிய நிலையில் 8 மணிநேரம், டிரான்ஸ்பரன்சி மோடில் 10 மணிநேரம் நீடிக்கும். விலை: $249. ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அனைத்தும் செப்டம்பர் 19 முதல் விற்பனைக்கு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.