ஐபோன் வாங்க இதுதான் தருணம்: சலுகை விலையில் ஐபோன் 11, ஐபோன் XR, ஐபோன் SE 2020

ஐபோன் SE 2020, ஐபோன் 11, ஐபோன் XR மற்றும் ஐபோன் 11 ப்ரோவைப் பெற நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதற்கான எங்களுடைய பட்டியல் இங்கே!

By: October 17, 2020, 8:00:33 AM

Iphone Offers Tamil News: ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் நாட்கள் விற்பனை, ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்களுக்கு இன்று மதியம் 12 மணிக்குத் தொடங்கியது. நாளை முதல், ப்ரைம் பயனர்களுக்கு அமேசானின் க்ரேட் இந்திய விழா விற்பனை தொடங்கவிருக்கிறது. இந்த இரு தளங்களும் ஐபோன்களில் அசத்தலான தள்ளுபடியை வழங்குகின்றன. உண்மையில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் SE 2020 பதிப்பு, எஸ்பிஐ வங்கி அட்டைகளின் மீதான 10 சதவிகித உடனடி தள்ளுபடியைத் தவிர்த்து ரூ.25,999 விலைக்கு கிடைக்கும். இரு தளங்களையும் நன்கு பகுப்பாய்வு செய்தபிறகு, ஐபோன் SE 2020, ஐபோன் 11, ஐபோன் XR மற்றும் ஐபோன் 11 ப்ரோவைப் பெற நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதற்கான எங்களுடைய பட்டியல் இங்கே!

ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனை

மிகக் குறைந்த விலையில் ஐபோன் SE 2020

ஐபோன் SE 2020 பதிப்பில் பெரும் தள்ளுபடியை ஃப்ளிப்கார்ட் வழங்குகிறது. ரூ.42,500 விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் SE 2020, எஸ்பிஐ வங்கி தள்ளுபடியைத் தவிர்த்து, ரூ.25,999-க்கு கிடைக்கும். எஸ்பிஐ தள்ளுபடியின் கீழ், நீங்கள் வாங்கியதில் இருந்து ரூ.2,000 வரை தள்ளுபடி பெற முடியும். அதாவது, வங்கி சலுகையுடன் ஐபோன் SE 2020-யின் விலை 23,999 ரூபாயாக குறைகிறது. குறிப்பாக, எஸ்பிஐ டெபிட் கார்டில் மட்டுமே தள்ளுபடி உள்ளது. ரூ.25,000 விலை பட்டியலை ஓர் நல்ல ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால், நிச்சயம் ஐபோன் SE 2020 சிறந்த ஆப்ஷன். மலிவு விலை ஐபோன் என்றாலும், இதன் செயல்திறனில் எந்தவித குறைவும் இல்லை. எக்ஸ்சேஞ் சலுகைகள் பற்றி ஃப்ளிப்கார்ட் வெளிப்படுத்தும்போது மேலும் தகவல்களை பகிர்வோம்.

அசத்தலான சலுகை விலையில் ஐபோன் XR

ஐபோன் XR-ன் வயது இரண்டு என்றாலும், இதன் செயல்திறன் மற்ற ஐபோன்களுக்கு இணையாகவே இருக்கிறது. ஐபோன் 12 அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஆப்பிள், அதன் ஐபோன் XR விலையை குறைத்தது. தற்போது ஃப்ளிப்கார்ட் அதற்கும் மேல் அதிகப்படியான தள்ளுபடியை வழங்குகிறது. ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனையின் போது, ரூ.37,999 விலையில் ஐபோன் XR கிடைக்கும். கூடுதலாக, 10 சதவிகித உடனடி தள்ளுபடி இதன் விலையை மேலும் ரூ.2,000 வரை குறைக்கும். இது, ஐபோன் XR-ன் விலையை ரூ.35,999-ஆகக் குறைக்கும். இதன் எக்ஸ்சேஞ் சலுகைகள் பற்றி ஃப்ளிப்கார்ட் வெளிப்படுத்தும்போது மேலும் தகவல்களை பகிர்வோம்.

முன்பு பார்த்திடாத விலையில் ஐபோன் 11 ப்ரோ

மலிவு ஐபோன்கள் மட்டுமல்ல, ஐபோன் 11 ப்ரோவிலும் ஃப்ளிப்கார்ட் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் போது, ரூ.79,999 தள்ளுபடி விலையில் ஐபோன் 11 ப்ரோ கிடைக்கும். மேலும், 10 சதவிகித உடனடி தள்ளுபடி இதன் விலையை மேலும் ரூ.2,000 வரை குறைக்கும். இது, ஐபோன் 11 ப்ரோவின் விலையை ரூ.77,999-ஆகக் குறைக்கும். இதன் எக்ஸ்சேஞ் சலுகைகள் பற்றி ஃப்ளிப்கார்ட் வெளிப்படுத்தும்போது மேலும் தகவல்களை பகிர்வோம்.

அமேசான் தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை

மிகக் குறைந்த விலையில் ஐபோன் 11

ஐபோன் 12 அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஆப்பிள், அதன் ஐபோன் 11 விலையை இந்தியாவில் குறைத்தது. ஐபோனில் கூடுதல் ஃப்ளாட் தள்ளுபடியை வழங்குகிறது அமேசான். இந்த கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ஐபோன் 11, ரூ.47,999 தள்ளுபடி விலையில் கிடைக்கும். மேலும், எச்டிஎஃப்சி வங்கி அட்டைகளில் ரூ.2,000 வரை, 10 சதவிகித உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். இது, ஐபோன் 11 விலையை ரூ.45,999-ஆகக் குறைக்கும். இதன் எக்ஸ்சேஞ் சலுகைகள் பற்றி ஃப்ளிப்கார்ட் வெளிப்படுத்தும்போது மேலும் தகவல்களை பகிர்வோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Amazon the great indian sale flipkart big billion days offers on iphone tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X