/tamil-ie/media/media_files/uploads/2018/09/apple-iphone-xr-vs-iphone-xs-vs-iphone-xs-max-759.jpg)
Apple iPhone 2019 series Camera Features
ஐபோன்களின் விலை : மிக நீண்ட காத்திருப்புகளுக்குப் பின்னர் நேற்று (12/09/2018) ஆப்பிள் மூன்று முக்கியமான ஐபோன்களை வெளியிட்டது. ஆப்பிள் ஐபோன் XR, ஆப்பிள் ஐபோன் XS, ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் என வெளியான மூன்று போன்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஐபோன்களின் விலை
ஆப்பிள் ஐபோன் XR நிறம் மற்றும் விலை
ஆப்பிள் ஐபோன் XR வெள்ளை, கருப்பு, நீலம், மஞ்சள், மற்றும் சிவப்பு வண்ணங்களில் வெளி வர இருக்கிறது. நேற்று வெளியான மூன்று போன்களில் இது தான் பட்ஜெட் போனாகும். இது மூன்று சேமிப்பு வேரியண்ட்களில் வெளியாகிறது.
64ஜிபி ஐபோன் XRன் விலை ரூபாய் 76,900 ஆகும். 128ஜிபி ஐபோன் XRன் விலை ரூபாய் 81,900 ஆகும். மற்றும் 256 ஜிபி போனின் விலை ரூபாய் 91,900 ஆகும். 12 எம்.பி. கேமராவுடன் வரும் இந்த போனின் அபார்ச்செர் f/1.8.
ஐபோன்களின் முதற்பார்வைப் பற்றி படிக்க
ஆப்பிள் ஐபோன் XS நிறம் மற்றும் விலை
ஆப்பிள் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் நிறங்களில் வெளி வர இருக்கிறது. ஐபோன் XSன் ஆரம்ப விலையாந்து ரூபாய் 99,900 ஆகும். 256ஜிபியின் விலை ரூபாய் 1,14,900 ஆகும் மற்றும் 512ஜிபி போனின் விலை Rs 1,34,900. இதனுடைய எடை சுமார் 177 கிராம் மட்டுமே.
ஐபோன் XS மேக்ஸ் விலை
64ஜிபி ஐபோன் XS மேக்ஸின் விலை 1,09,900 ரூபாய் ஆகும். அதற்கடுத்த வெர்ஷனான 256ஜிபி ஐபோனின் விலை விலை ரூபாய் 1,24,900 ஆகும் மற்றும் 512ஜிபி போனின் விலை Rs 1,44,900. இதனுடைய எடை 208 கிராம் ஆகும்.
ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் கேமராக்கள்
இந்த இரண்டு போன்களும் இரட்டை பின்பக்க கேமராக்களைக் கொண்டிருக்கிறது. அதன் திறன் 12MP (f/1.8) + 12MP (f/2.4) ஆகும். அதே போல் செல்பி கேமராவும் 7MPயுடன் கூடிய f/2.2 திறனைப் பெற்றிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.