இந்திய மொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஐபோன் எஸ்இ2 ஸ்மார்ஃபோன் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் களம் இறங்குவதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஐபோன் பிரியர்களுக்காக அந்நிறுவனம், நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்ப வசதிகளை புகுத்தி, பல்வேறு வகையான ஐபோன் மாடல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், புதிய மாடல் வகையான ஐபோன்களை இந்தாண்டில் வெளியிட ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த வரிசையில் விரைவில் ஐபோன் எஸ்இ 2 மாடல் அறிமுகமாக உள்ளது.
அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரவிருக்கும் இந்த ஃபோனில், பயனாளர்களை கவரும் வகையில் வசதிகள் இடம்பெற உள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு முதன்முதலில் வெளிவந்த ஐபோன் எஸ்இ மாடல் வாடிக்கையாளர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்தது. ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் ஃபோன்களுக்கு முன்னதாகவே வெளிவந்த இந்த மாடல் இந்திய சந்தையில் ரூ.22,000 க்கு விற்பனையாகியது. ஐபோன்எக்ஸ் கொண்டிருக்கும் 3 டி சென்சிங் தொழில்நுட்பம் இந்த ஐபோன் எஸ்இ2-லும் இடம்பெற இருப்பது கூடுதல் சிறப்பு.
இத்துடன், அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வயர்லெஸ் சார்ஜிங் ஐபோன் எஸ்இ2 இடம்பெற்றுள்ளது. மேலும், ஸ்போர்ட் கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஃபோன் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாடலின் விலை குறித்த விபரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. டச் ஐடி மற்றும் ஏ10 செயலி ஐபோன் எஸ்இ2 மாடலில் இடம்பெற்றுள்ளது. வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போன்ற அனைத்து இணைப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. விரைவில் இந்திய சந்தையில் வெளிவர இருக்கும் இந்த ஐபோன் எஸ்இ2 மாடல் பயனாளர்களை கவருமா? என்பதைப் பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.
ஐபோன் எஸ்இ2 முக்கிய அம்சங்கள்:
*5.7 அல்லது 5.8 இன்ச் டிஸ்ப்ளே
*6.0 அல்லது 6.1 இன்ச் ஸ்கிரீன்
*OLED டிஸ்ப்ளே
*3டி ஃபன்ங்ஸன்.