ஐபோன் பயனர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய நேரம் இது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஐ மெசேஜ் மூலம் சைபர் மோசடிகளை செய்து வருகின்றனர். காஸ்பர்ஸ்கை, (Kaspersky) சைபர் செக்யூரிட்டி நிறுவனம் ஐபோனில் இந்த மோசடிகளை கண்டறிந்தது. இது 'ஆபரேஷன் ட்ரையாங்குலேஷன்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது பயனரிடமிருந்து எந்த தொடர்பும் இல்லாமல் ஐ மெசேஜ் மூலம் மோசடிகளை செய்கிறது.
காஸ்பர்ஸ்கை சொந்த வைஃபை நெட்வொர்க்கை கண்காணிக்கும் போது இந்த மோசடியை கண்டறிந்தது. ஊழியர்கள் பலரின் ஐபோன்களை குறிவைத்து மெசேஜ் அனுப்பியுள்ளது. ஏதாவது ஒரு (Attachment) இணைப்புடன் ஐ மெசேஜ் அனுப்ப படுகிறது. அதனால் பயனர்கள் இதில் பாதுகாப்பாக இருக்கும் படி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மோசடி செய்பவர்கள் உங்கள் தனியுரிமை தகவல்களை ஹேக் செய்து மிரட்டுகின்றனர், பண மோசடியில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது. அப்படி மோசடி ஐமெசேஜை ஓபன் செய்யும் போது உங்கள் போன் அவர்களின் கட்டுப்பாட்டிற்கு செல்கிறது. அதோடு அந்த ஐமெசேஜும் டெலிட் செய்யப்படுகிறது.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
இந்த மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க பயனர்கள் தங்கள் போனில் உள்ள 3-ம் தரப்பு செயலிகளை உடனுக்குடன் அப்டேட் செய்து கொள்வது உதவியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“