/indian-express-tamil/media/media_files/2025/05/13/jf3YhNOUjZZtW474ND8z.jpg)
ஐபோன் யூஸ் பண்ணுறீங்களா? அரசின் இந்த எச்சரிக்கை உங்களுக்குத் தான்!
இந்தியாவில் நீங்கள் ஆப்பிள் ஐபோன் அல்லது ஐபேட் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால், சில குறிப்பிட்ட ஆப்பிள் சாதனங்களுக்கு இந்திய அரசு 'ஹை-ரிஸ்க்' எச்சரிக்கை விடுத்துள்ளது.
CERT-In எனப்படும் இந்திய கணினி அவசரநிலைப் செயல்பாட்டுக் குழு பகிர்ந்துள்ள இந்த எச்சரிக்கையில், பழைய iOS மற்றும் iPadOS பதிப்புகள் அதாவது iOS 17.3 மற்றும் iPadOS 16.3 க்கு முந்தைய எந்த ஐபோன் மற்றும் ஐபேட் தீவிர ஆபத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 17.3-க்கு முந்தைய Apple iOS மற்றும் iPadOS 16.3-க்கு முந்தைய Apple iOS மற்றும் iPadOS ஆகியவற்றுக்கு இதனால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினை ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்துவோருக்கு முக்கியமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது
மென்பொருளிலுள்ள குறைபாடு தீங்கு விளைவிக்கும் பயன்பாடுகள் உங்கள் சாதனத்தை செயலிழக்கச் செய்யலாம். இதனால், உங்கள் ஐபோன் பிரீஸ் ஆகலாம் அல்லது நீங்கள் அதை மீட்டமைக்கும் வரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். மோசமான சூழ்நிலைகளில், உங்கள் ஐபோன் "செங்கல்" போன்று அதாவது முற்றிலும் பயனற்றதாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர்.
இந்த சிக்கல் என்ன? ஐபோன்கள் மற்றும் ஐபேட்களின் ஆழமான அமைப்பாகும், இது சாதனத்தின் வெவ்வேறு பகுதிகள் ஒன்றோடொன்று தொடர்புகொள்ள உதவுகிறது. சிறப்பு அணுகல் இல்லாத பயன்பாடுகள் கூட இந்த அமைப்பை தவறாகப் பயன்படுத்தி ஆபத்தான கட்டளைகளை அனுப்ப முடியும் என்று CERT-In கூறுகிறது, இதனால் உங்கள் தொலைபேசி அல்லது டேப்லெட் சரியாக வேலை செய்வதை நிறுத்தக்கூடும்.
ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே இந்த சிக்கலை சரிசெய்ய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. எனவே, நீங்கள் சமீபத்தில் உங்கள் ஐபோன் அல்லது ஐபேட்டை அப்டேட் செய்யவில்லை என்றால், இப்போதுதான் சரியான நேரம். உங்கள் அமைப்புகளுக்குச் சென்று சமீபத்திய மென்பொருள் பதிப்பை இன்ஸ்டால் செய்யவும்.
அங்கீகரிக்கப்படாத நெட்வொர்க் பயன்பாட்டைத் தவிர்ப்பதன் மூலம் அபாயத்தைக் குறைக்கலாம். குறிப்பாக பாதுகாப்பற்ற பொது வைஃபை நெட்வொர்க்குகளைத் தவிர்க்க வேண்டும். 2FA எனப்படும் இரண்டு அடுக்கு பாதுகாப்பை பயன்படுத்த வேண்டும். ஆப்பிள் ஆப் ஸ்டோர் தவிர மற்ற தளத்தில் இருந்து அப்ளிகேஷன்களை ட்வுன்லோட் செய்யக்கூடாது.
அடிக்கடி செயலிழப்பது, திடீர் பேட்டரி குறைவு அல்லது காரணமின்றி உங்கள் தொலைபேசி சூடாவது போன்ற விஷயங்கள். உலகெங்கிலும் உள்ள பயனர்களை இலக்காகக் கொண்ட சாத்தியமான ஸ்பைவேர் தாக்குதல்கள் குறித்து ஆப்பிள் சமீபத்தில் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால்: நீங்கள் ஐபோன் அல்லது ஐபேட் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இப்போது அதை புதுப்பிக்கவும். இதனால், உங்களுக்கு ஏற்படக்கூடிய பெரிய தலைவலியைத் தவிர்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.