/tamil-ie/media/media_files/uploads/2018/09/apple_iphonex_bloomb.jpg)
Apple iPhone XR world’s best smartphone in Q3 2019
iPhone XR 2 Camera Updates : கடந்த ஆண்டு வெளியான XR, XS, XS Max போன்ற போன்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. சில போன்களுக்கு அவ்வபோது சிறப்புச் சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்கி வருகிறது இந்த நிறுவனம். தற்போது அடுத்த போன்களை தயாரிக்கும் பணியில் அதி தீவிரம் காட்டி வருகிறது ஆப்பிள் நிறுவனம்.
iPhone XR 2 Camera Updates
இந்த வருடம் வெளியாக இருக்கும் ஐபோன் எக்ஸ்.ஆர். 2 வேரியண்ட்கள் இரட்டை பின்பக்க கேமராக்களுடன் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. தற்போதைய வேரியண்டில் 12 எம்.பி ஒற்றைக் கேமரா தான் பொருத்தப்பட்டுள்ளது.
அதற்கு மாறாக இந்த வருடம் வெளியாக இருக்கும் போனில் இரட்டை பின்பக்க கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அவை முறையே வைட் ஆங்கில் லென்ஸ் மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் பெற்றவைகளாக இருக்கும் என்றும் கூறப்பட்டுகிறது. இந்த செட்டிங்ஸ் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் எக்ஸ்.எஸ் போனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் அனலிஸ்ட் வெளியிட்ட தகவலில் ஐபோன் 11 மற்றும் 11 மேக்ஸ் போன்கள் மூன்று பின்பக்க கேமராக்களையும், புதிதாக்கப்பட்ட ஃபேஸ் ஐடி மற்றும் பேட்டரிகளை கொண்டிருக்கும் என்று கூறியிருந்தது.
இந்த மூன்று போன்களும் யூ.எஸ்.பி. - சி டூ லைட்னிங் கேபிள்களுடன் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனையாகிவரும் எக்ஸ். ஆர் போனின் விலை ரூ.59,990 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.