/indian-express-tamil/media/media_files/m43kEG6Lq2pouiq2BjmZ.jpg)
2024-ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் மார்ச் 22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கோலாகமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் மோத உள்ளனர். தொடரின் முதல் ஆட்டம் சென்னையில் சி.எஸ்.கே- பெங்களூரு இடையே நடைபெற உள்ளது. ஐ.பி.எல் 2024 சீசன் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பார்ட்னராக
ஜியோ சினிமா உள்ளது. கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் ஜியோ சினிமா பயனர்களுக்கு இலவச ஸ்ட்ரீமிங் செய்கிறது.
இந்நிலையில், செயலிக்கான ஸ்ட்ரீமிங் இலவசமாக இருந்தாலும் டேட்டா பயன்படுத்த வேண்டும். அதற்கு
தகுந்தாற்போல் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன.
ஏர்டெல் திட்டம்
ஏர்டெல்லின் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்தத் திட்டம் ஐபிஎல் 2024 சீசன் முழுவதும் நீடிக்கும். போனஸாக, இந்த திட்டம் ஒரு இலவச பிரைம் வீடியோ சந்தா மற்றும் அன்லிமிடெட் இலவச 5ஜி டேட்டாவை வழங்குகிறது.
ஜியோ ஐ.பி.எல் கிரிக்கெட் ப்ளான்
ஜியோ இரண்டு கிரிக்கெட் திட்டங்களை வழங்குகிறது. ரூ.444 திட்டம் மொத்தம் 100 ஜிபி டேட்டாவை 60 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. மேலும் விலையுயர்ந்த ரூ.667 திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் மொத்தம் 150 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் டேட்டா பலன்கள் மட்டுமே அடங்கும், மேலும் ஏற்கனவே உள்ள டேட்டா திட்டங்களுடன் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.
ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டா ஆகியவை வழங்குகிறது. இது ஏர்டெல் திட்டத்தை விட சற்று விலை உயர்ந்ததாகத் தோன்றலாம். இருப்பினும், ஜியோவின் இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது மற்றும் மாதத்திற்கு ரூ.333 செலவாகும்.
வி.ஐ திட்டம்
வி.ஐ அடிப்படை ரீசார்ஜ் திட்டத்தில் திரைப்படம் மற்றும் டிவி சந்தாக்களுடன் இரவில் அன்லிமிடெட் 4ஜி டேட்டாவை வழங்குகிறது. (நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை) இந்த இலவச டேட்டாவை வழங்குகிறது.
வி.ஐ-ன் ரூ.699 ரீசார்ஜ் திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. நாளொன்றுக்கு இன்னும் அதிகமான டேட்டாவை நீங்கள் விரும்பினால், ரூ.475 திட்டத்தைத் தேர்வு செய்யவும். இது ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டாவை வழங்குகிறது ஆனால் வேலிடிட்டி 28 நாட்கள் மட்டுமே ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.