Advertisment

ஐ.பி.எல் தொடங்கியாச்சு; தள்ளுபடி விலையில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த வி.ஐ

வோடபோன் ஐடியா புதிய ரீசார்ஜ் திட்டங்களுக்கு ரூ.50 முதல் 100 வரை சலுகை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
VIdea.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வோடபோன் ஐடியா இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் தொடங்கி உள்ள நிலையில் கூடுதல் டேட்டாக்களுடன் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதோடு புதிய ரீசார்ஜ் திட்டங்களில் ரூ.50 முதல் 100 வரை சலுகை வழங்கப்படுகிறது. 

Advertisment

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவையொட்டி 3 சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இது வி.ஐ ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே சலுகை கிடைக்கும். ரூ. 1449 ரீசார்ஜ் திட்டம்  180 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இது 

ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்குகிறது. அதோடு ரீசார்ஜ் திட்டத்தில் ரூ.50 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

2-வது ரீசார்ஜ் திட்டத்தில் ரூ.3,199 திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி உடன் 365 நாள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. அதோடு ஒரு வருடத்திற்கு Amazon Prime Video Mobile Editionக்கான அணுகல் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இந்த பேக்கேஜில் 100 ரூபாய் தள்ளுபடியும் உண்டு. 3-வது ரீசார்ஜ் திட்டம் விலை குறைந்த மற்றும் மிகவும் மலிவான திட்டமாகும். ரூ.699 திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, 56 நாள் வேலிடிட்டி அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி உடன் இந்த திட்டத்தில் ரூ.50 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vodafone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment