Advertisment

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 SoC-ல் இயங்கும் முதல் ஸ்மார்ட் போன்: இந்தியாவில் iQOO 12 அறிமுகம்

இந்தியாவில் முதல் முறையாக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 SoC-ல் இயங்கும் iQOO 12 ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Iqoo12.jpg

iQOO 12 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் Snapdragon 8 Gen 3 SoC- ப்ராசஸரில் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போன் 2 வேரியண்ட்களில் வருகிறது. 12 ஜிபி ரேம் 256 இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. லெஜண்ட் (பி.எம்.டபிள்யூ எம் ஸ்போர்ட்ஸ் பிராண்டிங்குடன் வெள்ளை) மற்றும் ஆல்பா (ப்ளாக்) நிறங்களிலும் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Advertisment

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலின் விலை ரூ. 52,999 மற்றும் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி கொண்ட  higher-end variant  விலை டிசம்பர் 13 முதல் ப்ரையாரிட்டி  பாஸ் உரிமையாளர்களுக்கு ரூ.57,999 ஆகவும் வழங்கப்படுகிறது. 

HDFC மற்றும் ICICI பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ.3,000 தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் போனை ரூ.49,999 விலையில் பெறலாம். iQOO மற்றும் Vivo ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் பழைய சாதனத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் ரூ.5,000 வரை எக்சேஞ் விலை  பெறலாம். இது iQOO 11 இன் அறிமுக விலையை விட iQOO 12-ஐ மலிவானதாக்குகிறது.

iQOO 12 ஆனது 6.78-இன்ச் 144Hz புதுப்பிப்பு வீதம் 1.5K தெளிவுத்திறன் கொண்ட பிளாட் பேனல் AMOLED டிஸ்பிளே உடன் LTPO தொழில்நுட்பத்துடன் கொண்டுள்ளது. கேமிங் செயல்திறனை மேலும் மேம்படுத்த இந்த ஸ்மார்ட் போன் ஆனது  ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 மற்றும் இன்-ஹவுஸ் க்யூ1 சிப் ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. 

போன் ட்ரிபிள் கேமரா செட்அப் கொண்டுள்ளது.  50 MP பிரைமரி ஷூட்டர்,  50 MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 4 MP 3x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 1080p 30fps வரை வீடியோ ரெக்கார்டிங் திறன் கொண்டுள்ளது. 16 MP செல்ஃபி கேமரா உள்ளது. 

ஸ்மார்ட் போன் 5,000 mAh பேட்டரி மூலம் 120W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது, மேலும் ஃபாஸ்ட் சார்ஜர் போனுடன் வழங்கப்படுகிறது. ஹாட் ஆப்ஸ் மற்றும் கேம்கள் இல்லாமல் FunTouchOS 14 ஸ்கின் மூலம் ஆண்ட்ராய்டு 14 அவுட்-ஆஃப்-பாக்ஸுடன் ஃபோன் அனுப்பப்படுகிறது. iQOO 12 ஆனது மூன்று முக்கிய ஆண்ட்ராய்டு OS மேம்படுத்தல்கள் மற்றும் 4 வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Smartphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment