ஐகியூ நியோ வரிசையில் அதீத பேட்டரி திறனுடன் 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் நேற்று அறிமுகமாகியுள்ளது. பலரும் எதிர்பார்த்திருந்த ஐகியூ நியோ 10 ஸ்மார்ட்போன் இந்திய சந்தைகளில் கிடைக்கும் என ஐகியூ நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐகியூ நிறுவனம், இந்திய சந்தைகளில் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ளன. சீனாவின் விவோ நிறுவனம் செயல்பட்டுவரும் குவாங்டாங் மாகாணத்திலேயே ஐகியூ நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இந்த 2 நிறுவனங்களுமே இந்தியாவில் நடுத்தரக் குடும்பத்தின் ஸ்மார்ட்போன் கனவுகளை பூர்த்தி செய்துவரும் நிலையில், ஐகியூ நிறுவனம் அதிக பேட்டரி திறனுடன் நியோ 10 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஐகியூ நியோ 10 ஸ்மார்ட்போனானது 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB மற்றும் 16GB+512GB போன்ற நான்கு வகையான அம்சங்களுடன் வெளியாகி உள்ளது. 8GB+128GB கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.31,999க்கும், 8GB+256GB ஸ்மார்ட்போன் ரூ.33,999க்கும், 12GB+256GB ஸ்மார்ட்போன் ரூ.35,999க்கு கிடைக்கிறது. இதேபோல 16GB+512GB ஸ்மார்ட்போன் ரூ.38,999க்கு விற்கப்படுகிறது. ஏற்கெனவே ஐகியூ (அ) விவோ ஸ்மார்ட்போன் வைத்திருந்து அதனை மாற்றி இந்த புதிய ஸ்மார்ட்போன் வாங்கினால் ரூ.4,000 தள்ளுபடி பெறலாம். ஐகியூ, விவோ தவிர மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாற்றினால் ரூ. 2,000 தள்ளுபடி பெறலாம். எச்.டி.எஃப்.சி, எஸ்.பி.ஐ மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். தற்போது முன்பதிவு செய்பவர்களுக்கு ஜுன் 2 - 3 ஆம் தேதிகளில் பிற்பகல் 12 மணியளவில் டெலிவரி செய்யப்படும் என இந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
ஐகியூ நியோ 10 ஸ்மார்ட்போனானது குவால்கம் ஸ்நாப்டிராகன் 8எஸ் 4ஆம் தலைமுறை புராசஸர் கொண்டது. கேம் பிரியர்களைக் கவரும் வகையில் கியூ ஒன் சிப்செட்டும், 144FPS கேமிங் திரை அனுபவத்தையும் தரக்கூடியது. பிரகாசமான அமோலிட் திரையும், பயன்படுத்துவதற்கு சுமூகமாக இருக்கும் வகையில் 144Hz திறன் கொண்டது. 5,000 nits அளவில் மிக அதீத பிரகாசத்தை இத்திரை வழங்கும். பின்புற கேமராவில் 50MB லென்ஸ் உடன் சோனி நிறுவனத்தின் IMX882 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 32MB செல்ஃபி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. .8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் பரந்த காட்சிகளைப் படம்பிடிக்கவும், 32MP செல்ஃபி கேமரா உயர்தர செல்ஃபிக்களை எடுக்கவும் உதவுகிறது. மிகுந்த சிறப்பம்சமாக, 7000mAh பேட்டரி திறனுடன் 120W வேகமாக சார்ஜ் செய்யும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், 50% பேட்டரியை வெறும் 19 நிமிடங்களில் அடையலாம்.
கூடுதல் அம்சங்கள்:
- கூலிங் சிஸ்டம்: 7,000mm² வேப்பர் கூலிங் சேம்பர், நீண்ட நேரம் கேம் விளையாடும்போது ஃபோன் சூடாவதைத் தடுக்கிறது.
- ஆண்ட்ராய்டு 15: புதிய ஆண்ட்ராய்டு 15 (Funtouch OS 15 உடன்) அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் அனுபவத்தை வழங்குகிறது.
- பாதுகாப்பு: IP65 டஸ்ட், ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ஆகியவை பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
- இணைப்பு: Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, USB Type-C போர்ட் ஆகியவை அனைத்து நவீன இணைப்புத் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன.