Advertisment

6.78 இன்ச் டிஸ்பிளே, குவால்கம் சிப்; பிப்ரவரியில் களமிறங்கும் iQOO Neo 9 ப்ரோ: விலை, சிறப்பம்சங்கள் இங்கே

iQOO Neo 9 Pro ஸ்மார்ட் போன் இந்தியாவில் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
iQOO Neo 9.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

iQOO Neo 9 Pro ஸ்மார்ட் போன் இந்தியாவில் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. நியோ 9 சீரிஸில் புதிய போனை நிறுவனம் பிப்ரவரி, 2024 இல் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. iQOO Neo 9 மற்றும் iQOO Neo 9 Pro என 2 போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. iQOO Neo 9 டிசம்பர் இறுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. போனுக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில் இந்தியாவிலும் அறிமுகம் ஆகிறது. 

Advertisment

அட்டகாசமான அம்சங்களுடன் iQOO Neo 9, ப்ரோ வெர்ஷன் போன்கள் களமிறங்குகிறது.  iQOO Neo 9, இந்தியா-பிரிவுண்ட் iQOO Neo 9 Pro-க்கான டெம்ப்ளேட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6.78-இன்ச் 144Hz LTPO AMOLED டிஸ்ப்ளே 1.5K தெளிவுத்திறன் மற்றும் 1,400 nits வரை உச்ச பிரகாசம் மற்றும் HDR10+ பிளேபேக் ஆதரவுடன் வருகிறது

இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராஸசர் உடன் 16ஜி.பி வரை ரேம் மற்றும் 1டி.பி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Vivoவின் OriginOS 4 மென்பொருளானது 120W வேகமான வயர்டு சார்ஜிங்குடன் 5,160mAh பேட்டரியைப் பெறுவீர்கள்.

ஸ்மார்ட் போன் டூயல் கேமரா செட்அப் கொண்டுள்ளது.  50 மெகாபிக்சல் மெயின் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. அதே போல்  

iQOO Neo 9 ஆனது  டூயல்  ஸ்பீக்கர்கள் மற்றும் ப்ளூடூத் 5.3 உடன் பயோமெட்ரிக்ஸிற்கான இன்-ஸ்கிரீன்  fingerprint scanner உடன் வருகிறது. 

iQOO Neo 9 ஆனது 256 ஜி.பி தொடங்கி 1 டி.பி வரை ஸ்டோரேஜ் வழங்குகிறது. 12GB/256GB அடிப்படை மாடல் விலை ரூ. 27,000 ஆகும். 16GB/1TB ஸ்டோரேஜ் கொண்ட வெர்ஷன் போன் அதிகபட்சமாக ரூ. 39,000 என விலை பட்டியலிடப்பட்டுள்ளது. 

அதே போல், iQOO Neo 9 Pro 12GB/256GB, 12GB/512GB, 16GB/512GB மற்றும் 16GB/1TB என 4 வெரியண்ட்களில் வருகிறது. பேஸ் ரூ.36,250 தொடங்கி ரூ.47,000 வரை  விலை பட்டியலிடப்பட்டுள்ளது. எனினும் ஸ்மார்ட் போனின் விலை அறிமுக தேதி அன்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment