இந்தியாவில் 5ஜி சேவை கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. இந்நிலையில், பலரும் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மாறி வருகின்றனர். இதையடுத்து முன்னணி செல்போன் நிறுவனங்களும் மக்களின் வசதிக்கு ஏற்ப பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ரூ.10,000 பட்ஜெட்டில் சிறந்த பேட்டரி, கேமரா, ஸ்டோரேஜ் வசதி உடன் வரும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
மோட்டோரோலா ஜி 45 5ஜி (Moto G45 5G)
மோட்டோ ஜி 45 5ஜி ஸ்மார்ட்போன் .45-இன்ச் HD+ டிஸ்ப்ளே, 120Hz வரை ரெஃப்ரஷ் ரேட் , 500nits பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது. இதில் Qualcomm Snapdragon 6s Gen 3 ப்ராசஸர் கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி உடள் வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் கூடிய 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. வங்கி சலுகை பயன்படுத்தினால் ரூ.10,000க்கும் குறைவான விலையில் பெறலாம்.
ஐக்யூ இசட்9 லைட் (iQOO Z9 Lite)
இந்த போன் 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 840 nits பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்ட 6.56-இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 6300 சிப்செட் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14-ல் இயங்குகிறது. 6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது.
50MP பிரைமரி ஷூட்டர்கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் உட்பட டூயல் ரியர் கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது. இது அமேசான் தளத்தில் ரூ.10,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதிலும் வங்கி சலுகை உள்ளது. அதைப் பயன்படுத்தி ரூ.10,000க்கும் குறைவான விலையில் பெறலாம்.
ரியல்மி சி63 5ஜி (Realme C63 5G)
ரியல்மி சி63 5ஜி ஆண்ட்ராய்டு 14- அடிப்படையாக கொண்ட Realme UI 5.0-ல் இயங்குகிறது. இந்த போன் 6.67-இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 40Hz டச் சேம்ப்ளிங் ரேட் மற்றும் 625nits உச்ச பிராகாசம் உள்ளது.
இந்த போனில் Octa-Core MediaTek Dimensity 6300 6nm ப்ராசஸர் உள்ளது. அதே நேரம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் 2TB வரை ஸ்டோரேஜை விரிவாக்கிக் கொள்வதற்கான சப்போர்ட் உள்ளது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5000mAh பேட்டரியுடன் இந்த மொபைல் வருகிறது.
இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.11,999க்கும், அமேசான் தளத்தில் ரூ.11,879க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டிலும் இ.எம்.ஐ, வங்கி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.