/indian-express-tamil/media/media_files/2025/06/14/nMn6vVWv0ICJEFfeWcXM.jpg)
6,000 mAh பேட்டரி.. 50MP சோனி கேமரா.. ரூ.10,000 பட்ஜெட்டில் மிரட்டலான 5ஜி ஸ்மார்ட்போன்!
ஐக்யூ (iQOO) நிறுவனம் அதன் சமீபத்திய பட்ஜெட் 5G ஸ்மார்ட்போனான Z10 Lite 5G ஐ 18-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. புதிய ஐக்யூ போனின் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
சிறப்பம்சங்கள்:
6.74-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. MediaTek Dimensity 6300 சிப்செட் உடன் வருவதால், மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும், இந்த போனின் வடிவமைப்புக்கு ஐக்யூ அதிக கவனம் செலுத்தியுள்ளது.
ஓ.எஸ்: ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) மூலம் இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த போனுக்கு 2 வருட ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 3 வருட பாதுகாப்பு அப்டேட்களும் இந்த போனுக்கு கிடைக்கும்.
மெமரி: 4 ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என 3 வேரியண்ட்களில் ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.
கேமிரா: 50 எம்பி சோனி ஏஐ கேமரா + 2எம்பி செகண்டரி சென்சார், டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் புதிய ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
பேட்டரி: 6,000 mAh பேட்டரி உடன் ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இது 70 மணிநேர இசை பின்னணி, 22 மணிநேர வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் ஒரே சார்ஜில் சுமார் 9 மணிநேர கேமிங்கை வழங்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஐக்யூ இசட்10 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
விலை: ஐக்யூ இஸட் 10 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை இந்திய சந்தையில் ரூ.10,000 முதல் ரூ.12,990 வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் மற்றும் ஐக்யூ-வின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விற்பனைக்கு கிடைக்கும். மொத்தத்தில், ஐக்யூ இஸட் 10 லைட் 5ஜி, பட்ஜெட் விலையில் நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு சிறந்தத் தேர்வாக அமையும். இதன் பெரிய பேட்டரி, சோனி கேமரா மற்றும் சீரான செயல்திறன் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.