iQOO Z9 5ஜி ஸ்மாட்ர் போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது இன்று அறிமுகம் செய்யப்பட்ட iQOO Neo 9 Pro வெர்ஷனை விட விலை குறைவாகவும், பட்ஜெட் விலையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு iQOO Z9 5ஜி iQOO இதுவரை அறிமுகம் செய்த ஸ்மாட்ர் போன்களின் ப்ராசஸரை விட மிக வேகமாக செயல்படும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.
விலை, சிறப்பம்சங்கள்
iQOO Z9 5G டீசர் சமீபத்தில் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. அதன்படி, iQOO Z9 5ஜி green patterned finish, rectangular கேமரா வசதி இருக்கும் எனத் தெரிகிறது. பின்புறத்தில் 2 கேமரா சென்சார்கள் உள்ளன. அதனுடன் LED ஃபிளாஷ் யூனிட் உள்ளது. 50-மெகாபிக்சல் சோனி IMX882 முதன்மை சென்சார் OIS ஆதரவுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட் போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 SoC மூலம் இயக்கப்படுகிறது. இந்த விலையில் இதுவரை அறிமுகம் செய்யப்படாத மிக வேகமான ப்ராசஸராக iQOO Z9 5ஜி இருக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.
இந்த ஸ்மார்ட் போன் 1.5K OLED டிஸ்ப்ளே மற்றும் 6,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரேம் மற்றும் ஸ்டோரேஜ் போன்ற தகவல்கள் வெளியிடப்பட வில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“