இந்தியாவில் ரயில் சேவையை ஏராளமானவர்கள் பயன்படுத்துகின்றனர். நாள்தோறும் பள்ளி, கல்லூரி செல்பவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை ரயில் சேவையை ஏராளமானவர்கள் பயன்படுத்துகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்ப ரயில்வே நிர்வாகம் பல்வேறு வகையான ரயில் சேவைகளை வழங்குகிறது. பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ், சதாப்தி என சேவைகளை வழங்குகிறது.
இருக்கை பெட்டிகள், படுக்கை வசதி பெட்டிகள், குளிர்சாதன வசதி உள்பட ரயில்களின் சேவையை பொருத்து வசதிகள் உள்ளன. இந்நிலையில், தொலைத் தூரம் செல்பவர்கள் அந்த ஊர்களுக்கு ரயில் முன்பதிவு செய்து பயணிப்பர். இந்தியன் ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம், செயலி மூலம் முன்புதிவு செய்து பயணிக்கலாம். இந்தியன் ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
இந்நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி கணக்கில் இருந்து நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது வேறு யாருக்கேனும் உங்கள் கணக்கில் இருந்து டிக்கெட் முன்புதிவு செய்து கொடுத்தால், ரூ.10,000 அபராதம் அல்லது சிறை செல்ல வேண்டும் என ரயில்வே புதிய விதி கொண்டுவந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாக பரவியது. இந்தநிலையில், இந்த தகவல் உண்மையில்லை என மறுத்து ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி தனது X பக்கத்தில், வேறுபட்ட துணை பெயர்களில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக பரவும் தகவல் போலியானது. தனிப்பட்ட யூசர் ஐடியில் ஒருவர் தனது நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ டிக்கெட் முன் பதிவு செய்ய முடியும். ஒரு மாததத்தில் 12 டிக்கெட்டுகள் வரை ஒரு பயனர் புக்கிங் செய்து கொள்ளலாம்.
ஐ.ஆர்.சி.டி.சி கணக்கு ஆதார் உடன் இணைக்கப்பட்டிருந்தால் ஒரு பயனர் மாதத்தில் 24 டிக்கெட்டுகள் வரை புக் செய்ய முடியும். தனிப்பட்ட பெர்சனல் ஐடியில் புக் செய்யும் டிக்கெடுகளை வணிக நோக்கத்துடன் பயன்படுத்த கூடாது. இத்தகைய செயலில் ஈடுபடுவது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 143 கீழ் குற்றமாகும் என்று அதில் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“