நாள்தோறும் ஏராளமானோர் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக தொலைதூரங்களுக்கு செல்ல ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். காரணம் பேருந்து, விமான சேவையை விட கட்டணம் குறைவு. தேவையான வசதிகள் இருப்பதால் ரயில் சேவையை தேர்ந்தெடுக்கின்றனர். தொலைதூரம் செல்ல ஐஆர்சிடிசியின் இணையதளத்தில் முன்பதிவு செய்து பயன்படுத்துகின்றனர்.
ஐஆர்சிடிசி பயனர்களின் வசதிக்கு ஏற்ப சேவையை மேம்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது live train status வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொள்ளும்படி வசதி ஏற்படுத்தி உள்ளது. live train status, அதாவது ரயில் எங்கு இருக்கிறது, எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை பயனர்கள் அறிந்து கொள்ள தனியாக ஆப் (செயலி) டவுன்லோடு செய்து பார்க்க வேண்டும். ஆனால் தற்போது தனி ஆப் தேவைப்படாது என்றும் வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொள்ளும்படியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புது வசதியை மும்பையைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் ரைலோஃபி (Railofy) தயாரித்துள்ளது.
இந்த புது வசதி வாட்ஸ்அப் சாட்பாட் ( WhatsApp chatbot) மூலம் செயல்படும். PNR நிலை, live train status,அடுத்த ரயில் நிலையம், ரயில் பயண விவரம் ஆகியவற்றை இதில் பயனர்கள் தெரிந்து கொள்ள முடியும். ரயில் பயனர்கள் 139 என்ற ரயில்வே உதவி எண்ணை பயன்படுத்தியும் live train status தெரிந்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப்-பில் live train status
Step 1: ரைலோஃபி வாட்ஸ்அப் chatbot number - +91-9881193322 என்ற எண்ணை உங்கள் போனில் Save செய்ய வேண்டும்.
Step 2: இப்போது உங்கள் வாட்ஸ்அப் ஓபன் செய்து contact பட்டியல் (ரிபிரஸ்) refresh செய்ய வேண்டும்.
Step 3: Save செய்ய ரைலோஃபி வாட்ஸ்அப் contact பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
Step 4: அடுத்து, ரைலோஃபி வாட்ஸ்அப் பக்கத்தில் உங்கள் 10 இலக்க PNR நம்பரை டைப் செய்து send கொடுக்க வேண்டும்.
Step 5: இப்போது உங்களுடைய பயண விவரம், real-time updates, live train status ஆகியவை வழங்கப்படும்.
Step 6: ரயில் பயணத்திற்கு முன்பு கூட PNR நம்பர் அனுப்பி ரயிலின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.
அதேபோல் பயனர்கள் வாட்ஸ்அப்பில் உணவு ஆர்டர் செய்து கொள்ளலாம். ஐஆர்சிடிசி Zoop பயன்படுத்தி ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யலாம். வாட்ஸ்அப் சாட்பாட் +91 7042062070 என்ற எண்ணைப் பயன்படுத்தி ஆர்டர் செய்யலாம். அல்லது இணையதளத்தில் <https://wa.me/917042062070> இவ்வாறு குறிப்பிட்டு உணவு ஆர்டர் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“