இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) என்பது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும், கேட்டரிங், சுற்றுலா போன்ற ரயில் பயணச் சேவைகளை நிர்வகிப்பதற்கும் பயன்படுத்தப்படும் இணையதளம். 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளம், ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க உதவுகிறது.
சமீபகாலமாக, ஐ.ஆர்.சி.டி.சி. முகவர்கள் அதிக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது எளிதாகியுள்ளது. சில நேரங்களில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் உள்நுழைய முயற்சிக்கும்போது உங்கள் பாஸ்வோர்டை மறந்துவிட்டீர்கள் என்பதை நீங்கள் உணரலாம். உங்கள் உள்நுழைவு விவரங்களை மறந்துவிட்டாலோ? அல்லது உங்கள் கணக்கை அணுக முடியாவிட்டாலோ? உங்கள் ஐ.ஆர்.சி.டி.சி. கடவுச்சொல்லை விரைவாக மீட்டமைப்பது எப்படி? என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
உங்கள் வெப் புரவுசரில் ஐ.ஆர்.சி.டி.சி. வலைத்தளத்திற்குச் செல்லவும். அங்கு மேல் வலதுபுறத்தில் உள்ள 3 கோடுகளைக் கொண்ட மெனுவைத் தட்டி, 'Login' (உள்நுழைவு) விருப்பத்தை கிளிக் செய்யவும். அடுத்து, "Forgot account details?" (கணக்கு விவரங்களை மறந்துவிட்டீர்களா?) என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். புதிய பக்கம் திறக்கும், அங்கு நீங்கள் ஐஆர்சிடிசி பயனர் பெயர் அல்லது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியை உள்ளிட வேண்டும். இப்போது, கேப்சாவை உள்ளிட்டு, கீழே தோன்றும் 'Next' பொத்தானை கிளிக் செய்யவும். கேப்சா பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களுக்கு இடையே வேறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
இவற்றைச் செய்தவுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ஐடிக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) வரும். பின்னர் புதிய கடவுச்சொல் மற்றும் மற்றொரு கேப்சாவை உள்ளிடும்படி கேட்கப்படுவீர்கள். அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு முடித்ததும், கீழே உள்ள ஆரஞ்சு பெட்டியில் உள்ள 'Update Password' (கடவுச்சொல்லை புதுப்பி) பொத்தானைக் கிளிக் செய்யவும். இப்போது, ஐஆர்சிடிசி இணையதளத்தின் முகப்புப் பக்கத்திற்குச் சென்று, உங்கள் கணக்கு மற்றும் புதுப்பிக்கப்பட்ட கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைய முடியும்.