இந்திய ரயில் சேவைகளை நாள்தோறும் ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தொலைதூரங்களுக்கு செல்ல ரயில் சேவைகளை பயன்படுத்துகின்றனர். காரணம் மற்ற சேவைகளை விட பேருந்து, விமானத்தை விட ரயில் கட்டணம் குறைவு. குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்றதாக உள்ளது. முன்பதிவு செய்து பயணிக்கும் போது கூடுதல் வசதி கிடைக்கிறது. அந்தவகையில் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளப்படுகிறது. முதல் முயற்சியில் பணம் செலுத்துவது மிகவும் கடினமாக உள்ளது.
இந்த பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் Payments கேட்வே அம்சத்தை ஐ.ஆர்.சி.டி.சி மேம்படுத்தியுள்ளது. இதற்காக Easebuzz Payments தளத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இனி Easebuzz Payments தளத்துடன் விரைவாக, சிரமமின்றி முன்பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. Easebuzz payment Gateway பயன்படுத்தி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
- முதலில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளப் பக்கம் சென்று லாக்கின் செய்து கொள்ள வேண்டும். நீங்கள் எந்த ஊருக்கு செல்ல வேண்டுமோ அந்த ஊருக்கு செல்லும் ரயிலை சர்ச் செய்து தேர்தெடுக்கவும்.
- ரயில் செலக்ட் செய்ய பிறகு பயணியர் தகவல்கள் கொடுக்க வேண்டும்.
- அடுத்து பணம் செலுத்த Proceed to make the payment கிளிக் செய்யவும்.
- இப்போது payment gateway பக்கத்தில், Multiple Payment ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர் கீழே (scroll down) செய்து Easebuzz கிளிக் செய்ய வேண்டும்.
- இங்கே இரண்டு ஆப்ஷகள் இருக்கும் - கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
- கார்டு விவரங்களை கொடுத்து பணம் செலுத்தவும்.
- டெபிட் கார்டுகளுக்கு ரூ. 0.58, கிரெடிட் கார்டுக்கு ரூ.1.47 சேவை கட்டணமாக வசூலிக்கப்படும்.
- அவ்வளவு தான் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.
தடையற்ற மற்றும் பாதுகாப்பான கட்டணச் சேவைகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் Easebuzz Payments தளத்துடன் இணைந்து சேவைகளை மேம்படுத்த உள்ளது என்று தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/