IRCTC Tatkal Ticket Booking: கோடைகாலம் துவங்கியது. அனைவருக்கும் எங்காவது குளுகுளு பிரதேசம் ஒன்றில் கொஞ்சம் நாட்களுக்கு தலைமறைவாக இருக்கலாம் என்று கூட தோன்ற துவங்கியிருக்கும். வெகு நீண்ட பயணங்களை தேர்வு செய்து, மகிழ்ச்சியாக ரயிலில் நீங்கள் உங்களுக்கு பிடித்த மாநிலத்தின் அழகை கண்டு களிக்கலாம்.
ஐ.ஆர்.சி.டி.சியில் தட்கல் முறையில் டக்கென்று டிக்கெட் புக் செய்து உங்களின் பயணத்தை இனிதே தொடங்க யோசித்திருப்பீர்கள். ஆனால் எப்படி புக் செய்வது என்ற குழப்பம் நிச்சயம் அனைவருக்குமே இருக்கும். உங்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்த உதவும் வகையில் அமைகிறது இந்த கட்டுரை.
நாளைக்கு எங்காவது செல்ல வேண்டும் என்றால் இன்றைக்கு டிக்கெட் புக் செய்து கன்ஃபார்ம் செய்து கொள்ளும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது தான் தட்கல் புக்கிங். ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கு துவங்கும். நான் - ஏசி கம்பார்ட்மெண்டுகளின் டிக்கெட் புக்கிங் சரியாக காலை 11 மணிக்கு துவங்கும். ஐ.ஆர்.சி.டி.சி இணையம் மற்றும் ஆப் வழியாகவும், பே.டி.எம். ஆப் வழியாகவும் மிக எளிதாக டிக்கெட்களை நீங்கள் புக் செய்து கொள்ள இயலும்.
ஐ.ஆர்.சி.டி.சி இணையத்தில் டிக்கெட் புக் செய்வது எப்படி ?
தட்கல் டிக்கெட் புக்கிங் துவங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே இணையத்தில் லாக் இன் செய்வது வரவேற்க கூடிய ஒன்று
ஒரு பி.என்.ஆர் பயன்படுத்தி நான்கு பயணிகளுக்கு மட்டுமே தட்கல் மூலம் டிக்கெட் புக் செய்ய இயலும்.
ஓரிஜின், செல்ல வேண்டிய இடம், மற்றும் பயணிக்க வேண்டிய நாள் ஆகியவற்றை உள்ளீடாக தர வேண்டும்.
சப்மிட் தந்து, தட்கல் கோட்டவை க்ளிக் செய்ய வேண்டும்.
பின்பு, பெயர், வயது, பாலினம், சீட் ப்ரிஃபெரண்ஸ் ஆகியவற்றை உள்ளீடாக தரவேண்டும்
”Book only if confirm berths are allotted” என்ற செக் பாக்ஸை க்ளிக் செய்ய வேண்டும்.
பின்பு திரையில் தெரியும் கேப்சா கோடை க்ளிக் செய்ய வேண்டும்.
பேமேண்ட் மெத்தேட் க்ளிக் செய்து தட்கல் டிக்கெட்டுகளை புக் செய்ய வேண்டும்.
உங்களின் தட்கல் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்பட்டு பின்பு, டிக்கெடுகளை ரத்து செய்தால் பணம் வாபஸ் தரப்படமாட்டாது.
மேலும் படிக்க :ஐ.ஆர்.சி.டி.சியில் ஆதாரை இணைத்தால் 1 மாதத்தில் 12 டிக்கெட்கள் புக் செய்து கொள்ளலாம்…
ஐ.ஆர்.சி.டி.சி. ஆப் வழியாக டிக்கெட் புக் செய்வது எப்படி ?
டிக்கெட் ஓப்பனிங்குகளுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே ஆப்பை ஓப்பன் செய்து கொள்ளுங்கள்
எங்கிருந்து உங்கள் பயணம் துவங்குகிறது என்றும் எங்கு செல்கிறீர்கள் என்றும், பயண தேதி ஆகியவற்றையும் உள்ளீடாக கொடுங்கள்.
சப்மிட் தந்து, தட்கல் கோட்டவை க்ளிக் செய்ய வேண்டும்.
பின்பு, பெயர், வயது, பாலினம், சீட் ப்ரிஃபெரண்ஸ் ஆகியவற்றை உள்ளீடாக தரவேண்டும்
பின்பு திரையில் தெரியும் கேப்சா கோடை க்ளிக் செய்ய வேண்டும்.
ஜியோ மணி, ஏர்டெல் மணி, ஓலா மணி, மொபிவிக், போன்ற ஈ-வாலட்டுகள் வழியாகவும், ஏற்கனவே சேமிக்கப்பட்டு வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் வழியாகவும் பணம் கட்டலாம்.
ஒரு நபர் 6 வங்கிக் கணக்குகள் வரை இந்த ஐ.ஆர்.சி.டி.சி வாலட்டுகளில் இணைக்க இயலும்.
பே.டி.எம் வழியாக புக் செய்வது எப்படி ?
பே.டி.எம். லாக் இன் செய்யுங்கள் . அதில் ட்ரெய்ன் ஆப்சன் காட்டும்.
அதில் பயண இடம், ரயில் பெயர், எண் ஆகியவற்றை உள்ளீடாக கொடுத்து, தட்கல் கோட்டாவை செலக்ட் செய்ய வேண்டும்.
பின்பு பயணிகளின் விபரம் அளிக்க வேண்டும். செலக்ட் ப்ரீஃபெர்ட் பெர்த் என்ற ஆப்சனை கொடுத்து பே.டி.எம் வாலட் அல்லது க்ரெடிட் டெபிட் கார்டுகள் வழியாக டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்.