/tamil-ie/media/media_files/uploads/2019/03/a918.jpg)
IRCTC, IRCTC ticket booking
IRCTC Train Ticket Booking on Google Pay at No Extra Cost: கூகுள் பே மூலம் இனி இந்தியாவில் ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது. சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும், இதுகுறித்து IRCTCல் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைவருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதள மொபைல்களில், கூகுள் பே மூலம் இந்த வசதியைப் பெற முடியும் என கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் பே மூலம் பயனாளர்கள் ரயில் டிக்கெட்டுகள் புக்கிங் அல்லது கேன்சல் செய்யலாம். தவிர, இருக்கை இருப்பு, பயண நேரம் உள்ளிட்ட மற்ற தகவல்களையும் கூகுள் பே மூலம் அறியலாம். டிக்கெட் புக்கிங் செய்ய, பயனர்களுக்கு IRCTC-ல் தனி கணக்கு இருக்க வேண்டும். ஆனால், புக்கிங் செய்ய கூடுதல் கட்டணம் ஏதும் கிடையாது. பேடிஎம் மற்றும் Cleartrip போன்றவற்றில் உள்ளது போன்ற நடைமுறைகளே இதில் பின்பற்றப்படுகிறது.
கூகுள் பே மூலம் ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி?
உங்கள் மொபைலில் கூகுள் பே ஓப்பன் செய்து, பிஸ்னஸ் பிரிவில் உள்ள Trains Chat Head-ஐ க்ளிக் செய்யவும்.
புதிய டிக்கெட் என்பதை க்ளிக் செய்யவும்.
கிளம்ப வேண்டிய இடம், சென்றடைய வேண்டிய இடம், பயண தேதியை பதிவிட்டு, தோதான ரயிலை தேடுங்கள்.
ரயிலை தேர்வு செய்த பின், என்ன வகுப்பு என்பதை தேர்வு செய்யுங்கள்.
பிறகு, அனைத்தையும் உறுதி செய்த பிறகு, ஓகே பட்டனை அழுத்தவும்.
இப்போது, உங்கள் ஐஆர்சிடிசி கணக்கு குறித்த விவரம் கேட்கப்படும்.
அதில், பயணிகளின் தகவலை குறிப்பிடுங்கள்.
பிறகு, பயணத்தை உறுதி செய்யுங்கள்.
இப்போது, பணம் செலுத்தும் போது, உங்கள் UPI எண்ணை பதிவிட வேண்டும். அதன் மூலம் IRCTC தளத்திற்கு மாறுவீர்கள்.
அதில், IRCTC கடவுச் சொற்கள் மற்றும் Captcha சரியாக பதிவிட்டு, உங்கள் டிக்கெட்டை புக் செய்து கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.