scorecardresearch

ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் முன்பதிவு: இதை செய்தால் கூடுதல் நன்மைகள்.. என்னது தெரியுமா?

ஐஆர்சிடிசி பயனர் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் மாதம் 24 ரயில் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் முன்பதிவு: இதை செய்தால் கூடுதல் நன்மைகள்.. என்னது தெரியுமா?

நாடு முழுவதும் ஏராளமானோர் நாள்தோறும் ரயில் சேவையைப் பயன்படுத்துகின்றனர். குறுகிய தூரம் செல்வது முதல் தொலைதூரம் செல்வது வரை ரயில் சேவை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக குடும்பத்துடன் தொலைதூரம் செல்ல ரயில் சேவை சிறந்ததாக உள்ளது. ஏசி பெட்டிகள், படுத்துக் கொண்டு செல்லும் பெட்டிகள், உட்கார்ந்து செல்லும் பெட்டிகள் என ரயிலில் நம் தேவைக்கு ஏற்ப பெட்டிகள் வகைப்படுத்தப்பட்டிருக்கும்.

தொலைதூரம் செல்ல முன்பதிவு செய்து பயணிக்கலாம். விசேஷ நாட்கள், பண்டிகை காலங்களில் ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்து செல்லலாம். ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ தளத்தில் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.

இந்நிலையில் ஐஆர்சிடிசி பயனர் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் மாதம் 24 ரயில் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்றால் 12 டிக்கெட்கள் வரை மாதம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்,

பயனர்களின் வசதிக்கு ஏற்ப இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. ரயில்வே அமைச்சகம் கடந்தாண்டு இந்த வசதியை அறிமுகப்படுத்தியது. ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்கள், ஒரு ஐடி மூலம் தங்கள் குடும்பத்திற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் ஐஆர்சிடிசி ஐடியுடன் ஆதார் எண் இணைக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Irctc user id linking to aadhaar

Best of Express