Advertisment

ரயில் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்... வாட்ஸ்அப்பில் உணவு ஆர்டர்.. இருக்கை தேடி வரும் உணவு!

ஐஆர்சிடிசியின் ஜூப் உணவு விநியோக சேவை மூலம் ரயில் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப்பிலிருந்து உணவு ஆர்டர் செய்தால் இருக்கைக்கு கொண்டு வந்து கொடுக்கும் வகையில் புது வசதி அறிமுகப்படுத்தியுள்ளது. அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
ரயில் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்... வாட்ஸ்அப்பில் உணவு ஆர்டர்.. இருக்கை தேடி வரும் உணவு!

ரயிலில் தினமும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். குறிப்பாக வெளியூர் செல்ல நீண்ட தூரம் பயணம் செய்ய ரயில் போக்குவரத்தை தேர்தெடுக்கின்றனர். அந்தவகையில் பல நேரங்களில் உணவு எடுத்துச் செல்வது சிக்கலாக இருக்கும். இதற்கு தீர்வாக ஐஆர்சிடிசியின் உணவு விநியோக சேவை நிறுவனம் ஜூப் (Zoop பயனர்கள் எளிதாக உணவு ஆர்டர் செய்ய புது வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்தால் இருக்கைக்கு கொண்டு வந்து கொடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

ஜூப் நிறுவனம் Jio Haptik உடன் இணைந்து பயனர்களுக்கு வாட்ஸ்அப் சாட்போட் (WhatsApp chatbot) சேவையை வழங்கியுள்ளது. பயணியின் பிஎன்ஆர் (PNR)எண்ணை வைத்து இருக்கைகே உணவை கொண்டு வந்து டெலிவரி செய்யும்.

வாட்ஸ்அப்பில் ஆர்டர் செய்வதன் மூலம் கூடுதலாக எந்த ஆப்-களையும் ரயில் பயனர்கள் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை. அடுத்து வரும் ரயில் நிலையத்தை குறிப்பிட்டு ஆர்டர் செய்யலாம். ஆர்டர் செய்தபின் உங்கள் போனிலிருந்தே உணவை டிராக் செய்தும் பார்த்துக் கொள்ளலாம். ஆர்டர் தொடர்பான கருத்துகளையும் பதிவிட்டு மேம்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூப் வாட்ஸ்அப் சேவை பயன்படுத்துவது எப்படி?

Step 1: வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டும்

வாட்ஸ்அப் ஜூப் சாட்போட்டிற்கு முதலில் உங்கள் போனிலிருந்து மெசேஜ் அனுப்ப வேண்டும். +91 7042062070 என்ற எண்ணைப் பயன்படுத்தி மெசேஜ் அனுப்ப வேண்டும். இந்த எண்ணை பதிவு செய்து வாட்ஸ்அப் செய்யலாம். அல்லது

(https://wa.me/917042062070)என்ற இணையதளம் சென்று ஜூப் சாட்போட்டில் உணவு ஆர்டர் செய்யலாம்.

Step 2: தேவையான தகவல்களை பதிவிடவும்

வாட்ஸ்அப் ஜூப் சாட்போட்டிற்கு சென்றவுடன் உங்களது 10 இலக்க பிஎன்ஆர் (PNR number) எண் கேட்கப்படும். அதை குறிப்பிட்டவுடன் தானாகவே உங்கள் ரயில், பெட்டி, இருக்கை ஆகியவற்றை கணித்துவிடும். பின், உங்களை தகவல்களை சரிபார்க்க சொல்லும். அதன்பின் அடுத்து வரும் ரயில் நிலையத்தை குறிப்பிடக் கேட்கும்.

Step 3: உணவு ஆர்டர் செய்யுங்கள்

அடுத்து வரும் ரயில் நிலையத்தை குறிப்பிட்டவுடன் வாட்ஸ்அப் ஜூப் சாட்போட் அருகிலுள்ள உணவகம் மற்றும் உணவை ஆர்டர் செய்யும்படி கேட்கும். உணவை செலக்ட் செய்தவுடன், ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்திவுடன் உணவு ஆர்டர் செய்யப்பட்டுவிடும். அடுத்த ரயில் நிலையத்தில் உங்கள் உணவு டெலிவரி செய்யப்படும். இதற்கிடையில் நீங்கள் ஆர்டரை டிராக் செய்தும் பார்த்துக் கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment