/tamil-ie/media/media_files/uploads/2022/04/gmail.jpg)
ஜிமெயில் அதிகம் பயன்படுத்துபவர்கள் நிச்சயம் இந்த பிரச்சனையை எதிர்கொண்டிருப்பர். அதிக விளம்பர மெயில்கள் வந்து குவிந்திருக்கும். நமக்கு வேண்டிய முக்கியமான மெயிலைத் தேடுவது கூட கடினமாக இருக்கும். ஒரு கட்டத்தில் எரித்தலை ஏற்படுத்தும். நாம் எல்லாவற்றிருக்கும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம். ஒரு ஆப் டவுன்லோட் செய்யும்போது கூட ஜிமெயில் மூலம் தான் லாக்கின் செய்கிறோம். ஷாப்பிங் செய்யும் போதும் கூட துணிகடை, உணவகம் என எல்லாவற்றிருக்கும் ஜிமெயிலை கொடுக்கிறோம். அதனால் ஏராளமான விளம்பரங்கள் ஜிமெயிலில் வந்து குவிகின்றன. இதை தடுப்பதற்கு சில வழிகள் உள்ளன.
ஜிமெயில் பில்டர் என்றால் என்ன?
ஜிமெயில் பில்டர் வசதியைப் பயன்படுத்தி ஆட்டோமெடிக்காக மெயில்களை முறைப்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு ஐடியிலிருந்து மெயில் தொடர்ச்சியாக வருகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்றால், நீங்கள் ஜிமெயில் பில்டர் வசதியைப் பயன்படுத்தி, அந்த மெயிலை archive அல்லது delete டெலிட் செய்து கொள்ளலாம்.
ஜிமெயில் பில்டர் வசதியை பயன்படுத்துவது எப்படி?
பல்வேறு வழிகளில் ஜிமெயில் பில்டர் வசதியை பயன்படுத்தலாம். search box பயன்படுத்தி ஜிமெயில் பில்டர் வசதியை பயன்படுத்துவது எளிதாக இருக்கும்.
1.முதலில் ஜிமெயில் அக்கவுண்ட் லாகின் செய்ய வேண்டும்
2. பின், search bar-இல் ‘Show Search Options’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
3. நீங்கள் தவிர்க்க வேண்டிய ஐடியை குறிப்பிட வேண்டும். ஓரிரு வார்த்தைகளில் குறிப்பிடலாம்.
4. பின் அதில் வரும் தகவல்களில் வேண்டியவற்றை கொடுத்து, Create filter கொடுக்கலாம்.
மற்றொரு வழி
வேறு முறையிலும் இந்த வசதியை பயன்படுத்தலாம். அதற்கு செட்டிங்ஸ் மெனுவிற்கு செல்ல வேண்டும்.
வலப்புறத்தில் உள்ள gear ஐகான கிளிக் செய்ய வேண்டும். பின், செட்டிங்ஸ் ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும். பின், “Filters and Blocked Addresses” கிளிக் செய்து, “Create a new filter” கொடுக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.