/indian-express-tamil/media/media_files/2025/09/06/common-passwords-2025-09-06-12-55-55.jpg)
"123456" முதல் "password" வரை: உங்க பாஸ்வேர்டு இதுல இருக்கா? உலகிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் 25 பாஸ்வேர்டுகள்!
நமது வாழ்க்கை டிஜிட்டல் உலகத்துடன் இரண்டற கலந்துவிட்ட இந்த காலத்தில், பலவீனமான பாஸ்வேர்டு என்பது வீட்டின் முன் கதவை திறந்து வைப்பதற்குச் சமம். இ-மெயில் முதல் வங்கிச் செயலிகள் வரை, நமது ஆன்லைன் பாதுகாப்பு வலுவான பாஸ்வேர்டுகளில்தான் தொடங்குகிறது. ஆனாலும், லட்சக்கணக்கான மக்கள் இன்றும் எளிதான பாஸ்வேர்டுகளையே பயன்படுத்துகின்றனர். இவற்றை ஹேக்கர்கள் ஒரு விநாடிக்குள் உடைத்துவிட முடியும். NordPass என்ற நம்பகமான பாஸ்வேர்டு மேலாண்மை நிறுவனம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் 25 பாஸ்வேர்டுகள் குறித்த பட்டியல் இங்கே.
உலகிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் 25 பாஸ்வேர்டுகள்
NordPass நிறுவனம், பயனர்களின் தரவுகளை ஆய்வு செய்து, மிகவும் ஆபத்தான, எளிதில் ஹேக் செய்யக்கூடிய பாஸ்வேர்டுகளைக் கண்டறிந்து உள்ளது. முதல் 25 இடங்களைப் பிடித்த பாஸ்வேர்டுகள் மற்றும் அவற்றை ஹேக் செய்ய ஆகும் நேரம் குறித்த விவரங்கள்:
வரிசை | பாஸ்வேர்டு | ஹேக் செய்ய ஆகும் நேரம் | பயனர்களின் எண்ணிக்கை |
1 | 123456 | < 1 விநாடி | 3,018,050 |
2 | 123456789 | < 1 விநாடி | 1,625,135 |
3 | 12345678 | < 1 விநாடி | 884,740 |
4 | password | < 1 விநாடி | 692,151 |
5 | qwerty123 | < 1 விநாடி | 642,638 |
6 | qwerty1 | < 1 விநாடி | 583,630 |
7 | 111111 | < 1 விநாடி | 459,730 |
8 | 12345 | < 1 விநாடி | 395,573 |
9 | secret | < 1 விநாடி | 363,491 |
10 | 123123 | < 1 விநாடி | 351,576 |
11 | 1234567890 | < 1 விநாடி | 324,349 |
12 | 1234567 | < 1 விநாடி | 307,719 |
13 | 000000 | < 1 விநாடி | 250,043 |
14 | qwerty | < 1 விநாடி | 244,879 |
15 | abc123 | < 1 விநாடி | 217,230 |
16 | password1 | < 1 விநாடி | 211,932 |
17 | iloveyou | < 1 விநாடி | 197,880 |
18 | 11111111 | < 1 விநாடி | 195,237 |
19 | dragon | < 1 விநாடி | 144,670 |
20 | monkey | < 1 விநாடி | 139,150 |
21 | 123123123 | < 1 விநாடி | 119,004 |
22 | 123321 | < 1 விநாடி | 106,267 |
23 | qwertyuiop | < 1 விநாடி | 101,048 |
24 | 00000000 | < 1 விநாடி | 99,292 |
25 | Password | < 1 விநாடி | 95,515 |
உங்கள் பாஸ்வேர்டுகளைப் பாதுகாப்பாக மாற்றுவது எப்படி?
பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இருந்தாலும், மக்கள் இன்றும் எளிதில் யூகிக்கக்கூடிய பாஸ்வேர்டுகளையே மீண்டும் பயன்படுத்துகின்றனர். உங்கள் டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்த 3 டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.
1. நீளமான பாஸ்வேர்டை உருவாக்குங்கள்
குறைந்தபட்சம் 16 எழுத்துகள் கொண்ட பாஸ்வேர்டைப் பயன்படுத்துங்கள். பாஸ்வேர்டு எவ்வளவு நீளமாக இருக்கிறதோ, அதை உடைப்பது அவ்வளவு கடினம். தேவைக்கு அதிகமாக வார்த்தைகளையும் எழுத்துகளையும் சேர்ப்பது ஒரு நல்ல வழி.
2. தனிப்பட்ட தகவல்களைத் தவிருங்கள்
உங்கள் செல்லப்பிராணியின் பெயர் (அ) பிறந்த ஆண்டு போன்ற எளிதில் யூகிக்கக்கூடிய தகவல்களைப் பாஸ்வேர்டாகப் பயன்படுத்தாதீர்கள். அதற்குப் பதிலாக, ரேண்டமாகத் தேர்வு செய்யப்பட்ட வார்த்தைகள், எண்கள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்தலாம்.
எ.கா. சிக்கலான பாஸ்வேர்டு: cXmnZK65rf*&DaaD
நினைவில் கொள்ளக்கூடிய பாஸ்வேர்டு (Passphrase): HorsePurpleHatRunBayLifting இதுபோன்ற பாஸ்வேர்டுகள் நினைவில் கொள்ள எளிதாகவும், ஹேக் செய்வது கடினமாகவும் இருக்கும்.
3. ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்தனி பாஸ்வேர்டு
ஒருபோதும் வெவ்வேறு தளங்களுக்கு ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்துவமான, யூகிக்க முடியாத பாஸ்வேர்டை உருவாக்குங்கள்.
வங்கி கணக்கு: k8dfh8c@Pfv0gB2
மின்னஞ்சல்: kokobringwaterforidiot
சமூக ஊடகம்: e246gs%mFs#3tv6
பல பாஸ்வேர்டுகளை நினைவில் வைக்க, பாதுகாப்பான பாஸ்வேர்டு மேலாளர் (password manager) செயலியைப் பயன்படுத்தலாம். ஒரு வலுவான பாஸ்வேர்டுடன் தான் சைபர் பாதுகாப்பு தொடங்குகிறது. இந்தப் பட்டியல், மில்லியன் கணக்கானோர் இன்னும் எளிதில் ஹேக் செய்யக்கூடிய பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துவதை காட்டுகிறது. உங்களது தனிப்பட்ட தகவல்கள் பாதிக்கப்படாமல் இருக்க, உடனடியாக பாஸ்வேர்டுகளை வலுப்படுத்துங்கள், மீண்டும் பயன்படுத்துவதைத் தவிருங்கள், மேலும் டிஜிட்டல் பாதுகாப்பை பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.