Advertisment

ககன்யான், சந்திரயான் 3 என முழுவீச்சில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரோ!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ககன்யான், சந்திரயான் 3 என முழுவீச்சில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரோ!

இந்த வருடத்தின் துவக்கத்திலேயே மிகவும் முக்கியமான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது இஸ்ரோ. கே.சிவன், முதன்முறையாக, சந்திரயான் 2 தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து, இந்த வருடத்தில் இஸ்ரோ மேற்கொள்ள இருக்கும் முக்கியமான ஆராய்ச்சிகள் குறித்து அறிவிப்பினை வெளியிட்டார்.

Advertisment

publive-image இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஒரே நேரத்தில் சந்திரயான் 3 மற்றும் ககன்யான் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. சந்திரயான் 3 அடுத்த வருட தொடக்கத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

publive-image தற்போது திட்டமிடப்பட்டிருக்கும் சந்திரயான் 3 முழு வடிவம் பெற 14 முதல் 16 மாதங்கள் வரை ஆகலாம் என்றும், 2021ம் ஆண்டு விண்ணில் இது ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.

 

publive-image சந்திரயான் 2-ஐப் போலவே இதுவும் சாஃப்ட் லேண்டிங் முறைப்படி தரையிறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளாது. லேண்டர், ரோவர் மற்றும் ப்ரோபல்சன் மோட்யூல் ஆகியவை வடிவமைக்கப்பட உள்ளது.

 

publive-image இந்த திட்டத்திற்கு ரூ. 600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 2-ன் மொத்த மதிப்பு ரூ.960 என்பது குறிப்பிடத்தக்கது. 250 கோடி ரூபாய் லேண்டர், ரோவர் மற்றும் ப்ரொபல்சன் மாடலுக்கும், லாஞ்சிங் வேக்கிலான ஜி.எஸ்.எல்.வி மார்க் 3-க்கு ரூ. 350 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

pslv 2, isro 2020ம் ஆண்டு ககன்யான் திட்டத்துக்கான முக்கிய அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் இருந்து மனிதர்களை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. முதற்கட்டமாக இதற்கான பயிற்சியினை பெற 4 விமானிகள், இந்திய விமானப்படையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இம்மாதம் ரஷ்யாவுக்கு  அனுப்பப்பட உள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தியாவும் ரஷ்யாவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, இந்திய விமானப்படையில் இருந்து பல்வேறு  பரிசோதனைகளுக்கு பிறகு தேர்வு செய்யப்பட்ட நான்கு விமானிகள் ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் விமானிகளுக்கு யூரி காகரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிகள் வழங்கப்படும்.

இது மட்டுமின்றி, தமிழகத்தில், இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் உருவாக்குவதற்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் திட்டம் ஆரம்பமாகியுள்ளது என்றும் அறிவித்துள்ளார் அவர். குறைந்த அளவு எடை கொண்ட செயற்கை கோள்கள் SSLV இங்கிருந்து விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : இந்தியா விரைவில் சந்திரயான் – 3 உருவாக்கி 2021-இல் அனுப்பும்- இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேட்டி

Isro K Sivan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment